#BREAKING: ஒற்றுமையுடன் தேர்தல் பணி- ஓபிஎஸ், ஈபிஎஸ்..!
பெங்களூருவிலிருந்து சசிகலா நாளை மறுநாள் சென்னை வரவுள்ள நிலையில் மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்களுடன் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இன்று மாலை சென்னையில் உள்ள அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
இந்த கூட்டம் ஒன்றரை மணி நேரம் நடைபெற்றது. இந்த கூட்டத்த்திற்கு பின்னர், முதல்வர் துணை முதல்வர் இருவரும் வெளியிட்ட அறிக்கையில், ஒற்றுமையுடன் தேர்தல் பணியாற்றி வெற்றி பெற வேண்டும். எத்தனை நூற்றாண்டு வந்தாலும் மக்களுக்காகவே அதிமுக இயங்கும் என்ற ஜெயலலிதாவின் கனவை நிறைவேற்ற வேண்டுமென கட்சி நிர்வாகிகளுக்கு ஓபிஎஸ் இபிஎஸ் அறிவுறுத்தல்.