நிறைவடைந்தது தேர்தல் நேரம்…! டோக்கன் கொடுத்து வாக்குப்பதிவு தீவிரம்….!

Published by
அகில் R

Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது.

ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த தேர்தலில்  கட்சி உறுப்பினர்கள், சினிமா பிரபலங்கள், பொது மக்கள் என அனைவரும் ஆர்வமுடன் தங்களது வாக்குகளை அளித்து வந்தனர்.

இந்நிலையில், குறைந்தபட்சமாக தென் சென்னை 57.04%, மத்திய சென்னை 57.25%, வட சென்னையில் 59.16% வாக்குகள் பதிவாகியுள்ளது. மேலும், இடைத்தேர்தல் நடைபெறும் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியில் மாலை 5 மணிவரை 56.68% பேர் வாக்களித்துள்ளனர். தமிழகத்தில் மொத்தமாக 5 மணி நிலவரப்படி 63.20 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில் தற்போது 102 தொகுதிகளிலும் வாக்கு பதிவு நிறைவடைந்துள்ளது.

நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்திருக்கும் நிலையில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் EV இயந்திரத்தை சீல் வைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், தமிழகத்தில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் 6 மணிக்கு முன்பு வாக்களிக்க வந்த வாக்காளர்களை டோக்கன் வழங்கப்பட்டு, அதன் அடிப்படையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

மேலும், முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற தமிழகத்தில் ஒட்டு மொத்தமாக எத்தனை சதவீதம் வாக்கு பதிவாகி உள்ளது, எத்தனை பேர் வாக்களித்துள்ளனர் என்னும் விவரத்தை சற்று நேரத்தில் வெளியிடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  இன்று தொடங்கிய ஜனநாயக திருவிழாவின் முதற்கட்ட தேர்தல் வருகிற ஜூன் 1 ம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
அகில் R

Recent Posts

அம்பேத்கர் குறித்து சர்ச்சை பேச்சு: ‘அதிக பாவங்கள் செய்பவர்கள்’… அமித் ஷாவிற்கு மு.க.ஸ்டாலின் பதிலடி.!

சென்னை: மாநிலங்களவையில் அம்பேத்கர் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நேற்றைய தினம் நடந்த நாடாளுமன்றத்தில்…

38 minutes ago

ஜெய் பீம், ஜெய் பீம் என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கம் – இரு அவைகளும் ஒத்திவைப்பு!

டெல்லி: அம்பேத்கர் பெயர் இப்போது ஒரு பேஷன் ஆகிவிட்டது. அவர் பெயருக்கு பதில் கடவுளின் பெயரை சொல்லி இருந்தால் ஏழு…

2 hours ago

திடீரென ஓய்வை அறிவித்த ரவிச்சந்திரன் அஸ்வின்! காரணம் என்ன?

சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக…

2 hours ago

குறுக்கிட்ட மழை… இந்தியா – ஆஸ்திரேலியா 3வது டெஸ்ட் போட்டி டிரா!

பிரிஸ்பேன் : பிரிஸ்பேனில் நடைபெற்று வந்த இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் கவாஸ்கர் தொடரின் 5ஆம் நாள் ஆட்டம் இன்று…

2 hours ago

ஆம்பள யாரும் இல்லையா? பெண்களிடம் கீழ்த்தரமாக பேசிய பாமக எம்.எல்.ஏ அருள்!

சேலம் : மாவட்டத்தில் முத்துநாயகன்பட்டியில்  உள்ள பூட்டப்பட்ட கோயிலை திறப்பதற்கான பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றுள்ளது.  அப்போது அங்கிருந்த பெண்கள் பலரும் ஒன்றாக…

3 hours ago

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் அஸ்வின்!

சென்னை : இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் முன்னறிவிப்பு இல்லாமல் திடீரென அனைத்துவிதமான இந்திய கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு…

3 hours ago