நிறைவடைந்தது தேர்தல் நேரம்…! டோக்கன் கொடுத்து வாக்குப்பதிவு தீவிரம்….!
Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது.
ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த தேர்தலில் கட்சி உறுப்பினர்கள், சினிமா பிரபலங்கள், பொது மக்கள் என அனைவரும் ஆர்வமுடன் தங்களது வாக்குகளை அளித்து வந்தனர்.
இந்நிலையில், குறைந்தபட்சமாக தென் சென்னை 57.04%, மத்திய சென்னை 57.25%, வட சென்னையில் 59.16% வாக்குகள் பதிவாகியுள்ளது. மேலும், இடைத்தேர்தல் நடைபெறும் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியில் மாலை 5 மணிவரை 56.68% பேர் வாக்களித்துள்ளனர். தமிழகத்தில் மொத்தமாக 5 மணி நிலவரப்படி 63.20 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில் தற்போது 102 தொகுதிகளிலும் வாக்கு பதிவு நிறைவடைந்துள்ளது.
நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்திருக்கும் நிலையில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் EV இயந்திரத்தை சீல் வைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், தமிழகத்தில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் 6 மணிக்கு முன்பு வாக்களிக்க வந்த வாக்காளர்களை டோக்கன் வழங்கப்பட்டு, அதன் அடிப்படையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
மேலும், முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற தமிழகத்தில் ஒட்டு மொத்தமாக எத்தனை சதவீதம் வாக்கு பதிவாகி உள்ளது, எத்தனை பேர் வாக்களித்துள்ளனர் என்னும் விவரத்தை சற்று நேரத்தில் வெளியிடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று தொடங்கிய ஜனநாயக திருவிழாவின் முதற்கட்ட தேர்தல் வருகிற ஜூன் 1 ம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.