#ELECTIONBREAKING: வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை.., கல்விக் கடன் ரத்து -அதிமுக அறிவிப்பு..!

Published by
murugan

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது கூட்டணி, தொகுதி பங்கீட்டை முடித்ததை தொடர்ந்து, வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டது. அந்த வகையில் சட்டப்பேரவை தேர்தலுக்கான அதிமுகவின் வேட்பாளர் பட்டியலை ஏற்கனவே வெளியிட்டு இருந்தனர்.

இந்நிலையில், கட்சித் தலைமையகத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி உள்ளிட்டோர் தேர்தல் அறிக்கை வெளியிட்டனர். குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1500, ஆண்டுக்கு ஆறு சிலிண்டர்கள் இலவசம் உள்ளிட்ட வாக்குறுதிகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது முழு தேர்தல் அறிக்கை வெளியிடப்படுகிறது.

  • அம்மா வாஷிங் மெஷின் வழங்கும் திட்டம்.
  • அனைவருக்கும் சோலார் அடுப்பு.
  • கல்லூரி மாணவர்களுக்கு ஆண்டு முழுவதும் 2 ஜி.பி டேட்டா,
  • அம்மா இல்லம் என்ற பெயரில் ஏழைகளுக்கு வீடு.
  • அனைத்து இல்லங்களுக்கும் விலையில்லா அரசு கேபிள் சேவை.
  • வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை.
  • ரேசன் பொருட்கள் வீடு தேடி வந்து வழங்கப்படும்.
  • 100 நாட்கள் வேலைத்திட்டம் 150 நாட்கள் ஆக உயர்த்தப்படும்.
  • நம்மாழ்வார் பெயரில் வேளாண் ஆராய்ச்சி மையம்.
  • சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக்கப்படும் .
  • நகரப் பேருந்துகளில் மகளிருக்கு கட்டண சலுகை.
  • பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும்.
  • மகப்பேறு விடுப்பு ஒரு ஆண்டாக உயர்த்தப்படும்.
  • இலங்கை தமிழ் அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்படும்.
  • நெல், கரும்புக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்த்தப்படும்.
  • ஆட்சிக்கு வந்தவுடன் ஆட்டோ ஓட்டுநர்கள் ஆட்டோ வாங்க ரூபாய் 25000 மானியம் வழங்கப்படும்.
  • மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத்தின் பெயர் சூட்டப்படும்.
  • மாதந்தோறும் மின் பயனீட்டு கணக்கீடு நடைமுறை அமல்.
  • பொங்கல் பண்டிகை உதவித்தொகை தொடரும்.
  • அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் மதுகடைகள் படிபடியாக மூடப்படும்.
  • கட்டணம் இல்லாமல் லைசன்ஸ் மற்றும் ஓட்டுனர் பயிற்சி.
  • கல்விக் கடன் ரத்து.
  • அனைத்து மாவட்டங்களிலும் மினி ஐ.டி.பார்க்.
  • தூய்மை பணியாளர்களுக்கு ஊதியத் தொகை ரூ.6000 ஆக உயர்த்தப்படும்.
  • கோவை, மதுரையிலும் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும்.
  • அமைப்புசார தொழிலாளர்களுக்கு ரூ.10000 வட்டியில்லா கடன்.
  • வேலை இல்லாத இளைஞர்களுக்கு இரட்டிப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும்.
  • இளைஞர்களுக்கு குறைந்தவட்டியுடன் தொழில்தொடங்க நிதியுதவித் திட்டம்.
  • அனைத்து ஜாதியினருக்கும் உள் இட ஒதுகீடு வழங்க நடவடிக்கை.
  • சாதிவாரி கணக்கெடுப்பு அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படும்.
  • முதியோர் ஓய்வூதியம் ரூ2,000 வழங்கப்படும்- அதிமுக தேர்தல் அறிக்கை.
  • நீட், ஜே.இ.இ தேர்வுகளுக்கு இலவச நுழைவுத்தேர்வு பயிற்சி.
  • ஆட்சிக்கு மீண்டும் வந்த உடன் கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • ஏழை திருமண தம்பதிகளுக்கு சீர்வரிசை இலவசமாக அரசே வழங்கும்.
  • அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும்.
Published by
murugan

Recent Posts

மன்மோகன் சிங் கொண்டுவந்த திட்டங்கள் : 100 நாள் வேலை முதல்.., கல்வி உரிமை சட்டம் வரை…

மன்மோகன் சிங் கொண்டுவந்த திட்டங்கள் : 100 நாள் வேலை முதல்.., கல்வி உரிமை சட்டம் வரை…

டெல்லி : முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை…

11 minutes ago

மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன?

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்கத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வந்த நிலையில், வார இறுதியில்…

31 minutes ago

6 முறை சாட்டையடி., திமுகவை அகற்ற வேண்டும்., அண்ணாமலை போராட்டம்!

கோவை : அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சாட்டையடி…

40 minutes ago

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மறைவு : இந்திய கிரிக்கெட் வீரர்களின் ‘கருப்பு பேட்ஜ்’ அஞ்சலி!

மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…

2 hours ago

LIVE: மன்மோகன் சிங் மறைவு முதல்… அடுத்தடுத்த அரசியல் நிகழ்வுகள் வரை!

டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…

2 hours ago

மன்மோகன் சிங் மறைவு – அரசியல் தலைவர்கள் இரங்கல்! மோடி முதல் ஸ்டாலின் வரை…

டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…

3 hours ago