தேர்தல் பாதுகாப்பு பணி: 150 கம்பெனி துணை ராணுவத்தினர் இன்று தமிழகம் வருகை
இன்று இரவுக்குள் தமிழகத்தில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் 150 கம்பெனி துணை ராணுவத்தினர் தமிழகம் வந்து சேருவார்கள் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழகத்தில் உள்ள இரண்டு முக்கிய பிரதான கட்சிகளான அதிமுகவும், திமுகவும், தேசிய கட்சிகள் மாநில கட்சிகள் என பலமான கூட்டணியை வைத்து போட்டியிட உள்ளது.
இந்நிலையில் தேர்தல் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல் தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், இன்று இரவுக்குள் தமிழகத்தில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் 150 கம்பெனி துணை ராணுவத்தினர் தமிழகம் வந்து சேருவார்கள்.ஏற்கனவே 10 கம்பெனி துணை ராணுவத்தினர் தமிழகம் வந்துள்ளார்கள் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.