பொதுவாக,சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை,எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.இதனால்,பெட்ரோல்,டீசல் விலையில் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதுண்டு.
இந்நிலையில்,127-வது நாளாக மாற்றமின்றி சென்னையில் இன்றும் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.101.40-க்கும்,அதைப்போல், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.91.43-க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.சென்னையில் கடந்த 2 மாதங்களும் மேலாக பெட்ரோல்,டீசல் விலையில் எந்த மாற்றமுமின்றி தொடர்ந்து வரும் நிலையில்,பெட்ரோல்,டீசல் விலை குறைக்கப்படாமல் உள்ளதால் வாகன ஓட்டிகள் ஏற்கனவே கவலைக் கொண்டுள்ளனர்.
இதனிடையே,உக்ரைன் ரஷ்ய போர் காரணமாக இந்தியா வாங்கும் ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை 139 டாலராக அதிகரித்துள்ளது. 2012 ஆம் ஆண்டிற்குப் பின் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது இதுவே முதல் முறையாகும்.மேலும்,கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.
அதே சமயம்,இந்தியாவில் 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில்,அதன் முடிவுகள் வெளியாகியுள்ளது.தேர்தல் காரணமாக இதுவரை உயர்த்தப்படாத பெட்ரோல்,டீசல் விலை இனி வரும் நாட்களில் கடுமையாக உயரலாம் என கூறப்படுகிறது.
மதுரை : இன்று மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநாடு நடைபெற்று வருகிறது. வரும் ஏப்ரல் 6ஆம் தேதி…
சென்னை : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை…
சென்னை : கோடை காலத்தில் கொளுத்தும் வெயியிலின் தாக்கத்தின் காரணமாக உடல் சூட்டை தணிக்க பொதுமக்கள் தர்பூசணி பழத்தை விரும்பி…
சென்னை : நேற்றைய தினம் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், இன்று இலங்கை அரசுடன்…
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் கடந்த வாரம் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில்…
மும்பை: இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், உள்ளூர் போட்டிகளில், அடுத்த சீசனில் இருந்து கோவா அணிக்கு விளையாட…