தேர்தல் அறிக்கை! மக்களிடம் கருத்து கேட்கும் திமுக… பரிந்துரைகளை எப்படி அனுப்புவது?

DMK Manifesto

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்காக பிரதான கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை தயார் செய்வது உள்ளிட்டவைகள் தொடர்பான தேர்தல் பணிக்குழு அமைத்து அதற்கான வேலைகளில் மும்மரமாக ஈடுபட்டு வருகிறது. இதில், திமுக சார்பில் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் பணிக்குழு அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஒருங்கிணைப்புக்குழு, தொகுதி குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் குழு மற்றும் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு என மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டது.

இதில் குறிப்பாக கனிமொழி எம்பி தலைமையில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு அமைக்கப்பட்டு பல்வேறு ஆலோசனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த குழுவில் டி.கே.எஸ்.இளங்கோவன், பழனிவேல் தியாகராஜன், எம்.எல்.ஏ. எழிலன், மேயர் பிரியா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். சமீபத்தில், கனிமொழி எம்பி கூறியதாவது, திமுக தேர்தல் அறிக்கை எப்போதும் போல இம்முறையும் முக்கிய பங்காற்றும். பொது மக்கள், தொழிலாளர்கள், கல்வியாளர்கள் ஆகியோரின் கருத்துக்களை கேட்க உள்ளோம் என கூறியிருந்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு எந்த தொகுதி.. இன்று பேச்சுவார்த்தை..!

இந்த நிலையில், மக்களவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தொடர்பாக மக்களிடம் கருத்து கேட்பதற்காக அறிவிப்பை திமுக வெளியிட்டுள்ளது.  இதுதொடர்பான அறிவிப்பில், நாடாளுமன்றத் தேர்தல் 2024-க்கான திமுக தேர்தல் அறிக்கையை வடிவமைப்பதில் தமிழ்நாட்டு மக்களின் பங்களிப்பை தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு எதிர்பார்க்கிறது. அதன்படி, 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான பரிந்துரைகளை திமுக தேர்தல் அறிக்கைக் குழுவிற்கு அனுப்பு வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு, அண்ணா அறிவாலயம், எண் 367/369, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை – 600018 என்ற முகவரிக்கு கடிதங்கள் மூலமாகவோ அல்லது dmkmanifesto2024@dmk.in மூலமாகவும் அனுப்பலாம். மேலும், நீங்கள் நேரடியாக தொலைபேசியில் எண் 08069556900 அழைத்து உங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம் அல்லது #DMKManifesto2024 என்ற ஹேஷ்டேக்குடன் சமூகவலைத்தளங்களில் பதிவிடலாம்.

இதுபோன்று, உங்கள் பதிவுகளை பேஸ்புக் பக்கம் – DMKManifesto2024 அல்லது வாட்ஸ்அப் எண் 9043299441 மூலம் பரிந்துரைகளை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்ளலாம் என்றும் QR CODE மூலமாகவும் ஆன்லைனில் பரிந்துரைகளை அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் திமுக தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்