இந்திய தேர்தல் அதிகாரிகள் இன்று சென்னை வருகை..!

Election of India

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இதனால் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றன.இதற்கிடையில்  தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளில் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய, இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகள் இன்று சென்னை வருகை தருகிறார்கள்.

இந்திய தலைமை துணை தேர்தல் ஆணையர் அஜய் பதூ தலைமையில் 2 நாட்கள் நடைபெறவுள்ள ஆலோசனை கூட்டத்தில், தமிழக தேர்தல் அதிகாரிகள், வருமான வரித்துறை, காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளனர்.

இன்று அறிமுகப்படுத்தப்படும் “பாரத் அரிசி” திட்டம்..!

இன்று தலைமை செயலகத்தில் மதியம் 12 மணியில் இருந்து பிற்பகல் 1.30 மணி வரை தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் பிற அதிகாரிகளை சந்தித்து பேசுகின்றனர். அதன்பின்னர் பிற்பகல் 2.30 மணியில் இருந்து மாலை 5.30 மணி வரை தலைமை செயலகத்தில் வருமான வரித்துறை உள்ளிட்ட அமலாக்க முகமை அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளனர்.

அதைத் தொடர்ந்து நாளை அதாவது 7-ம் தேதி காலை 9.30 மணி முதல் மாலை 6.30 மணி வரையில் மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் கமிஷனர்கள் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுகளுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்துகின்றனர். அதன்பின்னர் இரவு 9 மணிக்கு டெல்லி புறப்பட்டு செல்கின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்