தேர்தல் அதிகாரி கடிதம் – திருப்பி அனுப்பிய அதிமுக அலுவலகம்!
தேர்தல் ஆணையம் குறிப்பிட்ட பதவிகளில் யாரும் இல்லை என கூறி கடிதத்தை திருப்பி அனுப்பிய அதிமுக.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவின் கடிதத்தை அதிமுக தலைமை அலுவலகம் ஏற்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. சாகு அனுப்பிய கடிதத்தை பெற்றுக்கொள்ள மறுத்து அதிமுக தலைமை அலுவலக அதிகாரிகள் திருப்பி அனுப்பினர்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு அனுப்பிய கடிதத்தை பெற மறுப்பு தெரிவித்துள்ளனர். தேர்தல் ஆணையம் குறிப்பிட்ட பதவிகளில் யாரும் இல்லை என கூறி கடிதத்தை அதிமுக நிர்வாகிகள் திருப்பி அனுப்பியுள்ளனர்.
ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம் பற்றி ஜனவரி 16ல் அரசியல் கட்சிகளுக்கு செயல்முறை விளக்கம் தருகிறது தேர்தல் ஆணையம். ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம் (RVM) குறித்து ஜனவரி 31க்குள் அரசியல் கட்சிகள் கருத்துக்களை அனுப்ப ஆணையிடப்பட்டுள்ளது. இதற்காக மாநில தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.