தேர்தலில் தார்மீக வெற்றி காங்கிரஸுக்கு.. தார்மீக தோல்வி பாஜகவுக்கு – ப.சிதம்பரம் கருத்து.!

Default Image

சென்னை : நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தனிப்பெரும்பான்மை வெற்றியை பெற முடியவில்லை. அதனால், கூட்டணி ஆதரவுடன் மீண்டும் பாஜக ஆட்சியமைக்க உள்ளது. இந்த நிலையில், கருத்துகணிப்பு மக்களை முட்டாளாக்கியது என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பேசிய ப.சிதம்பரம், “தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் அனைத்தும் தவறானது. கருத்துக் கணிப்பு அனைத்தையும் ஒரே இடத்தில் தயாரித்து ஊடகங்களுக்கு விநியோகிக்கப்பட்டது. கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களும் பாஜக 350 இடங்கள் பெறும் என ஒரே மாதிரி சொன்னது எப்படி? என கேள்வி எழுப்பிய அவர், இந்தியா கூட்டணி அகில இந்திய அளவில் 234 இடங்களை பெற்றது சாதாரண வெற்றி அல்ல, ஆனால் 400 இடங்கள் இலக்கு வைத்திருந்த பாஜக 240 இடங்களை மட்டுமே வென்றுள்ளது.

மக்களவைத் தேர்தலில் 400 இடங்களை இலக்கு வைத்த பாஜக மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. பாஜகவினர் களையிழந்து இருப்பதை பார்க்கிறேன்,
பாஜகவுக்கு மக்கள் அடக்கத்தை கற்றுத் தந்துள்ளனர். நாங்கள் வெற்றி பெற்றிருக்கிறோம், கொண்டாடுகிறோம் அதில் மோடிக்கு என்ன பிரச்சனை? வேண்டுமானால் அவர்களும் கொண்டாடட்டுமே. யார் வேண்டாம் என்றது? என கருத்து தெரிவித்துள்ளார்.

தேர்தலில் காங்கிரஸுக்கு தார்மீக வெற்றி கிடைத்துள்ளது. தார்மீக தோல்வி என்பது பிரதமர் மோடிக்குதான், பாஜக ஆட்சி நிலைக்குமா? என்பதை காலம்தான் பதில் சொல்ல வேண்டும். தேர்தலுக்கு பின்னர், பங்குச்சந்தையில் ஏற்பட்டது வளர்ச்சி இல்லை, வீக்கம் என்று கூறிய அவர், ஜவஹர்லால் நேருவுடன் தன்னை மோடி ஒப்பிட்டுக் கொள்ள முடியாது. அவ்வாறு ஒப்பிட்டுக்கொள்வதை காங்கிரஸ் நிராகரிக்கிறது.

மணிப்பூர் ஒரு ஆண்டுக்கு மேல் கலவரம் நடந்தது. பலர் அகதிகளாக உள்ளனர், 21-வது நூற்றாண்டில் மணிப்பூர்‌ வன்முறை மிகப்பெரிய நிகழ்வாகும். மணிப்பூருக்கு ஏன் இதுவரை பிரதமர் செல்லவில்லை. மின்னனு வாக்குப்பதிவு எந்திரம் வேண்டாம் என காங்கிரஸ் ஒருபோதும் சொல்லவில்லை.

வாக்குப்பதிவு எந்திரத்தில் முன்னேற்றம் வேண்டும் என்றே கூறுகிறோம். EVM இயந்திரங்களை நிராகரிக்கவில்லை, EVM இயந்திரங்களை மேலும் மேம்படுத்த வேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு. காங்கிரஸ் கட்சிக்குள் ஒரு சிலர் EVM இயந்திரங்களுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருக்கலாம், அது கட்சியின் நிலைப்பாடு அல்ல என்று கூறிஉள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்