தலித்தா…தேர்தலையே புறக்கணித்த கிராம மக்கள்… அந்த மக்களின் வினோத முடிவு…

Published by
Kaliraj
  • தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமம்  பிச்சிவிளை.
  • இந்த  கிராம ஊராட்சியில் இன்று நடைபெற்ற தேர்தலில் பெருவாரியான கிராம மக்கள் வாக்களிப்பதை தவிர்த்துள்ளனர்.

இந்த கிராமத்தில் மொத்தம் ஆறு வார்டுகள் உள்ளன.இந்த கிராமத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 785. இந்த  ஊராட்சியில்  இந்த முறை தலைவர் பதவி சுழற்சி முறையில்  தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு இந்த முறை கொடுக்கப்பட்டது. ஆனால் இந்த ஊராட்சியில் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு 6 ஓட்டுகள் மட்டுமே இருக்கின்றது. எனவே ஊராட்சியில் சிறுபான்மையினராக உள்ள தலி சமூகத்தை சேர்ந்தவர்  தலைவரா? என்று பிற மக்களிடையே கருத்து எழுந்தது. இதை கருத்தில் கொண்டு ஊராட்சியில் உள்ள ஆறு வார்டுகளுக்கும் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.மேலும் அவர்கள் இந்த  தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துவிட்டு தங்கள் வீடுகளில் கருப்புக் கொடிகளை கட்டி உள்ளனர்.

இன்று பிச்சிவிளை ஊராட்சியில் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், இந்த ஊராட்சியில் ஆறு வாக்காளர்கள் மட்டுமே ஓட்டு போட்டுள்ளனர். இவர்கள் அனைவருமே தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.இந்த ஊராட்சியின்  தலைவர் பதவிக்கு ராஜேஸ்வரி மற்றும் சுந்தராச்சி என்ற இரு தலித் பெண்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். அவர்களையும் சேர்த்து மொத்தமே 6 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. பிற சமூக  பொதுமக்கள் வந்து வாக்களிக்க வேண்டும் என்று அதிகாரிகள் எவ்வளவோ சமாதானப்படுத்தியும் எடுத்து கூறியும் , மக்கள் அதை ஏற்கவில்லை. இந்த தேர்தலை இந்த கிராம மக்கள் புறக்கணித்தது தமிழக மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Published by
Kaliraj

Recent Posts

நிறைவடைந்த ஐபிஎல் மெகா ஏலம்! சென்னை அணி வீரர்களின் முழு லிஸ்ட் இதோ!

நிறைவடைந்த ஐபிஎல் மெகா ஏலம்! சென்னை அணி வீரர்களின் முழு லிஸ்ட் இதோ!

ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலம் நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில்,…

30 minutes ago

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (26/11/2024) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…

4 hours ago

கனமழையை எதிர்கொள்ள உதவி எண்களை அறிவித்த புதுச்சேரி ஆட்சியர்!

புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…

4 hours ago

ரெட் அலர்ட் எதிரொலி: நாளை நாகை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…

5 hours ago

ஈ சாலா கப் நம்தே? பெங்களூரு தேடிய ‘அடேங்கப்பா 11 பேர்’ இவர்களா?

பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…

6 hours ago

75 லட்சம் டூ 4.80 கோடி… தொக்காய் தூக்கிய மும்பை அணி! யார் இந்த அல்லா கசன்ஃபர்?

ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…

6 hours ago