தமிழ்நாட்டில் விரைவில் இதற்கான தேர்தல்.. ஆணையரை நியமித்து தமிழக அரசு உத்தரவு!
தமிழகத்தில் கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையராக கட்டாரியா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் விரைவில் கூட்டுறவு சங்க தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையராக தயானந்த் கட்டாரியா IAS நியமனம் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது. கூட்டுறவு சங்கங்களின் தேர்தலை நடத்துவதற்காக தேர்தல் ஆணையராக பொதுப்பணித்துறை செயலாளர் தயானந்த் கட்டாரியாவை நியமிப்பதற்கான உத்தரவை தமிழக ஆளுநர் உத்தரவின்பேரில், தலைமைச் செயலாளர் இறையன்பு பிறப்பித்துள்ளார்.
இதனிடையே, கூட்டுறவுச் சங்க நிர்வாகிகளின் பதவிக் காலம் 5 ஆண்டுகள் என்பதை மூன்று ஆண்டுகளாக குறைத்துத் திருத்தச் சட்ட முன் வடிவை அமைச்சர் ஐ.பெரியசாமி கடந்த ஜனவரி 7ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வந்தார். அதன்படி, அனைத்து வகை கூட்டுறவு சங்கங்களின் பதவிக்காலம் டிசம்பர் 31-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதற்கு முன்னர் 2018ம் ஆண்டு இந்த சங்கங்களுக்குத் தேர்தல் நடத்தப்பட்டது. சங்கத்துக்கான தலைவர், துணைத் தலைவர், இயக்குநர்கள் பதவிகளில் அதிமுகவினரே உள்ளனர்.