தமிழகத்தில் 3 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் அறிவிப்பு,எப்போது வெளியாகும் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மார்ச் 23 ஆம் தேதியன்று மாநிலங்களவை உறுப்பினர் முகமது ஜான் காலமானார்.அதன் பின்னர்,மே 10, 2021 அன்று மாநிலங்களவை உறுப்பினர்கள் வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி பதவியை ராஜினமா செய்தனர்.
மேலும்,அவர்கள் மூன்று பேருடைய பதவிக்காலம் முறையே 24.7.2025, 29.06.2022 மற்றும் 02.04.2026 ஆகிய தேதிகளில் முடிவடையவுள்ளது. இதனால், தமிழ்நாட்டில் மூன்று மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான இடைத்தேர்தலை, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951ன் படி உடனடியாகத் தேர்தல் ஆணையம் நடத்த வேண்டும் என்றும்,அதற்கான தேர்தல் அறிவிப்பை தனித்தனியாக வெளியிட வேண்டும் என்றும் தேர்தல் ஆணையர்களிடம் டி.ஆர்.பாலு, வில்சன் ஆகியோர் கடந்த மாதம் நேரில் வலியுறுத்தினர்.
இந்நிலையில்,தமிழகத்தில் காலியாகவுள்ள 3 மாநிலங்களவை எம்.பி.க்களுக்கான தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் ஓரிரு நாட்களில் வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கலிபோர்னியா : மொபைல் பயனர்கள் பாதுகாப்பாக ஒரு ஆப்-ஐ பதிவிறக்கம் செய்ய நம்பிக்கை மிக்க தளமாக உள்ளது கூகுள் பிளே…
சென்னை : 2026-ல் மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு செய்யப்படும் என கூறப்படுகிறது. இந்த தொகுதி மறுசீரமைப்பில்…
சென்னை : கடந்த 5 நாட்களாகவே ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்து வந்த நிலையில், இன்று சற்று குறைந்ததால், நகை…
உத்தர பிரதேசம்: இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனை தடுக்க மத்திய,…
சென்னை : நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பாக, நாளை நடைபெறும் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக, கேரள முதலமைச்சர்…
பாட்னா : பாட்னாவின் பாடலிபுத்ரா விளையாட்டு வளாகத்தில் நேற்று நடந்த செபக்தக்ரா உலகக் கோப்பை தொடக்க விழாவில்,தேசிய கீதம் இசைக்கப்படும்போது…