தேர்தல் பறக்கும் படையினர் காரில் நேருக்கு நேர் மோதிய லாரி…! பெண் காவலர் பலி….!
வேலூரில், குடியாத்தம் நோக்கி சென்று கொண்டிருந்த தேர்தல் பறக்கும் படையினர் வந்த காரில், லாரி ஒன்று நேருக்கு நேர் மோதியுள்ளது.
தேர்தலை முன்னிட்டு தேர்தல் பறக்கும் அதிகாரிகள் அனைத்து இடங்களிலும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வேலூரில், குடியாத்தம் நோக்கி சென்று கொண்டிருந்த தேர்தல் பறக்கும் படையினர் வந்த காரில், லாரி ஒன்று நேருக்கு நேர் மோதியுள்ளது.
இந்த விபத்தில் பெண் காவலர் மாலதி சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிரிழந்துள்ளார். மேலும் 3 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, உருக்குலைந்த நிலையில் கிடந்த காரை மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய லாரி ஓட்டுனரை தீவிரமாக தேடி வருகின்றனர்.