தேர்தல் டெபாசிட் தொகை.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் 25 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும், சட்டமன்ற தேர்தலாக இருந்தால் வேட்பாளர்கள் 10 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும். அதுவே பட்டியலின மற்றும் பழங்குடியின வேட்பாளர்களாக இருந்தால் இந்த தொகைகளில் பாதியை டெபாசிட் செய்ய வேண்டும்.
இந்நிலையில், சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த பார்த்திபன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கை ஒன்றை தாக்கல் செய்தார். அதில், பல ஆண்டுகளாக டெபாசிட் செய்யும் தொகை உயர்த்தப்படவில்லை, தேர்தலுக்கு கோடிக்கணக்கில் செலவழிக்கும் வேட்பாளர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.10,000 உயர்ந்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் தேர்தல் ஆணையத்திற்கு மனு அனுப்பியதாகவும் ஆனால் அந்த மனு தேர்தல் ஆணையம் பரிசீலிக்கவில்லை.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீது வரும் 12-ம் தேதி தீர்ப்பு..!
எனவே தனது மனுவை தேர்தல் ஆணையம் பரிசீலிக்கும்படி உத்தரவு பிறப்பிக்கவேண்டும் என மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் எந்த பொது பொது நலனும் இல்லை, விளம்பரத்துக்காகவே தாக்கல் செய்யப்பட்டதாக தெரிகிறது. டெபாசிட் தொகையை உயர்த்தக் கோரிய விண்ணப்பத்தை பரிசீலிக்கும்படி உத்தரவிட முடியாது என நீதிமன்றம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இந்த வழக்கை தள்ளுபடி செய்தனர்.