சட்டமன்ற தேர்தல்: தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று 2ம் நாளாக ஆலோசனை.!
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று 2ம் நாளாக ஆலோசனை மேற்கொள்கிறார்.
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவுடன், சுஷில் சந்திரா, உமேஷ் சின்ஹா, ராஜிவ் குமார் உள்ளிட்ட 8 அதிகாரிகள் நேற்று சென்னை வந்த அவர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தனித்தனியே தேர்தல் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். அப்போது, தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தலை நடத்த ஆணையரிடம் பாஜக, காங்கிரஸ் கோரிக்கை விடுத்திருந்தது. இதுபோன்று சட்டமன்ற தேர்தலை ஏப்ரல் கடைசி வாரத்தில் நடத்த வேண்டும் என்று அதிமுக கோரிக்கை வைத்திருந்தது.
இந்நிலையில், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று 2ம் நாளாக ஆலோசனை மேற்கொள்கிறார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக தமிழக தேர்தல் அதிகாரி, அலுவலர்கள் என பல்வேறு துறை அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.