திருவாரூர் இடைத் தேர்தல் ரத்து தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் இன்று பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து:
திருவாரூர் தொகுதியில் 28ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த சூழலில் கஜா புயல் நிவாராணப் பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளதால் இடைத்தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்ததையடுத்து, திருவாரூர் ஆட்சியர் நிர்மல்ராஜ் நடத்திய கூட்டத்திலும் இதே கருத்து வலியுறுத்தின. இதனால் இடைத்தேர்தலை ரத்து செய்வதாக அறிவித்த தலைமை தேர்தல் ஆணையம் கஜா புயல் நிவாரணப் பணிகளை சுட்டிக்காட்டி இடைத்தேர்தலை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் விளக்கமளித்தது . கஜா புயல் பாதிப்புகள் இருப்பதால் வருகின்ற ஏப்ரல் வரை இடைத்தேர்தல் நடத்தக் கூடாது என்று கூறியுள்ள தேர்தல் ஆணையம் திருவாரூரில் சுமூக நிலை திரும்பியவுடன் தேர்தல் நடத்தப்படும் என்று தெரிவித்தது.
இடைத்தேர்தலை ரத்து செய்த அறிவிப்புக்கு தடைகோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு:
இந்நிலையில் இடைத்தேர்தலை ரத்து செய்த அறிவிப்புக்கு தடைகோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஓன்று தொடரப்பட்டது.அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்ய மத்திய அரசு அனுமதி தந்ததா..? என்று தேர்தல் ஆணையத்திற்கு கேள்வி எழுப்பியது.அதேபோல் இடைத்தேர்தலை ரத்து செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு உண்டு, ஆனால் மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும்.
தேர்தல் ஆணையம் அளித்த பதிலில், கஜா புயல் நிவாரண பணிகள் நடைபெற்று வருவதாக கட்சி தலைவர்கள் கூறியதால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
ஜனவரி 30-ஆம் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவு:
பின்னர் உயர்நீதிமன்ற மதுரை கிளை ஜனவரி 30-ஆம் தேதிக்குள் அதாவது இன்று பதில் அறிக்கை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை : இயக்குநர் வெற்றிமாறன் ஆடுகளம் படத்தில் நாங்க பன்னா தரமா இருக்கும் ஊருக்கே தெரியும் என்ற வசனத்தை வைத்திருப்பார். அந்த…
சென்னை : துணை வேந்தர் நியமனம் தொடர்பான தேடல் விவகாரத்தில், மாணவர்களின் நலன் கருதி பல்கலைகழக மானிய குழு உறுப்பினரை…
டெல்லி : சமாஜ்வாதி கட்சியின் எம்பி ஜியா உர் ரஹ்மான், மின்சார திருட்டு குற்றச்சாட்டின் அடிப்படையில் அவருக்கு உத்தரபிரதேச பவர்…
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது.இந்த…
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக…
கோவை : 1998ஆம் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைதாகி நீண்ட வருடம் சிறையில் இருந்து வந்த அல்…