வேட்பாளர்கள் ரூ.95 லட்சம் வரை செலவு செய்யலாம் – தேர்தல் ஆணையம்
Election Commission: நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி முதல் 7 கட்டங்களாக நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் அறிவித்திருந்தது. இதில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 22 மாநிலங்களில் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
Read More – 2024 மக்களவை தேர்தல்… திமுக நேரடியாக களமிறங்கும் 21 தொகுதிகள்!
இதற்கான வேட்புமனு தாக்கல் ஒரு சில நாட்களில் தொடங்க உள்ளது. எனவே, மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அதற்கான பணியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையமும், மாநில தேர்தல் ஆணையமும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
Read More – இதுதான் நாங்க போட்டியிடும் ‘சாதகமான’ தொகுதி.! காங்கிரஸ் திட்டவட்ட அறிவிப்பு.!
அந்தவகையில், மக்களவைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் மற்றும் வேட்புமனு தாக்கலுக்கான பணிகள் தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன், தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
Read More – மீண்டும் ஆட்டத்தை ஆரம்பிக்கும் தமிழிசை.! ஆளுநர் பதவிகளுக்கு குட்’பை’.!
இந்த நிலையில், மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் வேட்பாளர் செலவினம் ரூ.95 லட்சமாக உயர்த்தி தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த 2014 நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் ரூ.40 லட்சமும், 2019ல் ரூ.70 லட்சமும் இருந்த நிலையில், தற்போது வேட்பாளர்கள் ரூ.95 லட்சம் வரை செலவு செய்யலாம்.
இதுபோன்று சட்டமன்ற தொகுதிக்கு ரூ.40 லட்சம் வரை செலவு செய்யலாம் எனவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு 2014ல் ரூ.16 லட்சமாகவும், 2019ல் ரூ.28 லட்சமாகவும் வேட்பாளர் செலவினம் இருந்த நிலையில், தற்போது ரூ.40 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.