கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் தயார் – சத்யபிரதா சாகு
கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் தயாராக உள்ளது என்று தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி தொகுதி எம்பி-யாக இருந்த வசந்தகுமார் அண்மையில் காலமானார்.எனேவ தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி மக்களவை தொகுதி காலியான நிலையில் தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.இதனிடையே தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில் தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு கூறுகையில்,கொரோனா பரவல் காரணமாக சட்டமன்ற தேர்தலில் 80 வயதிற்கு மேற்பட்டவர்கள் தபால் வாக்கு பதிவு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் தயாராக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.