வாக்கு சதவீதத்தில் குளறுபடி… தமிழ்நாடு அறிவித்ததை குறைத்து அறிவித்த இந்திய தேர்தல் ஆணையம்!

election commission

Election2024: தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று முடிந்த நிலையில், வாக்கு சதவீதத்தில் குளறுபடி ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில், இதில் முதல் கட்டமாக நேற்று 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் குறிப்பாக தமிழகத்தில் 39 மற்றும் புதுச்சேரியில் ஒன்று என மொத்தம் 40 தொகுதிகளில் நேற்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழ்நாட்டில் மொத்தம் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ள நிலையில், 68,320 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்றது. அதன்படி, இளைஞர்கள், முதல் தலைமுறை வாக்காளர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என அனைவரும் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர். இருப்பினும், சில பகுதிகளில் வாக்குப்பதிவு மந்தமாக இருந்ததாக கூறப்பட்டது.

மாலை 6 மணிக்குள் வாக்குச்சாவடிக்குள் வந்தவர்களுக்கு மட்டும் டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். பின்னர் சுமுகமாக வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. இந்த சூழலில் நேற்று இரவு செய்தியாளர் சந்திப்பில் பேசிய தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு, தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குகள் பதிவாகியுள்ளது என்றார்.

இதனைத்தொடர்ந்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பில், தமிழகத்தில் 69.46% வாக்குகள் பதிவாகியுள்ளது என அறிவித்தது. இதில் அதிகபட்சமாக தருமபுரி தொகுதியில் 81.48% வாக்குகளும், குறைந்தபட்சமாக தென் சென்னையில் 54.27% வாக்குகளும் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இதனால் வாக்கு சதவீதத்தில் பெரும் குளறுபடி ஏற்பட்டுள்ளது. அதாவது, தமிழகத்தில் நேற்று மக்களவை தேர்தலில் பதிவான மொத்த வாக்கு சதவீதமும், தொகுதி வாரியாக அறிவிக்கப்பட்ட வாக்கு சதவீதத்திலும் பெரும் வேறுபாடு இருப்பதால் அனைவரும் குழப்பத்தில் உள்ளனர்.

தமிழகத்தில் 72.09% வாக்குகள் பதிவாகியுள்ளது என அறிவித்திருந்த நிலையில், இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தமிழகத்தில் 69.46% வாக்குகள் பதிவாகியுள்ளது என்று சுமார் 3% குறைத்து அறிவித்துள்ளது. இது பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இன்று 10 to 12 மணியளவில் தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு வாக்கு சதவீதம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிக்க உள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்