பிரஸ் மீட் இல்லை… விளக்கம் இல்லை… அதிரடியாய் அறிவித்த தேர்தல் ஆணையம்.!

Election Commission of India - Vote in Tamilnadu

Election2024 : தமிழகத்தில் 69.46%வாக்குகள் பதிவானதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

நாடாளுமன்ற முதற்கட்ட மக்களவைத் தேர்தல் நேற்று 21 மாநிலத்தில் 102 தொகுதிகளில் நடைபெற்று முடிந்தது. தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு ஆரம்பித்து மாலை 6 மணிக்கு நிறைவு பெற்றது. 6 மணிக்குள் வாக்குச்சாவடிக்குள் வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு இரவு 8 மணியை தாண்டியும் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனால் துல்லியமான வாக்குப்பதிவு நிலவரம் அறிவிக்கப்படாமல் இருந்து வந்தது.

இப்படியான சமயத்தில் தான் நேற்று இரவு தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யப்பிரதா சாகு தமிழகத்தில் 72.09 சதவீத வாக்குகள் பதிவானதாக அறிவித்தார். மேலும் தபால் வாக்குகள் எண்ணப்படவில்லை என்றும் அதில் குறிப்பிட்டு இருந்தார். இருந்தாலும் உறுதியான நிலவரம் இன்று வெளியிடப்படும் என அறிவித்தார்.

இதனை தொடர்ந்து இன்று காலை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவலின் படி, தமிழகத்தில் 69.46 சதவீதம் வாக்குகள் பதிவானதாக குறிப்பிடப்பட்டிருந்தது. தமிழக தேர்தல் ஆணையர் சொல்லியதற்கும் இதற்கும் 2.63 சதவீத வாக்குகள் வித்தியாசம் இருந்தது. இதனால் உறுதியான வாக்குப்பதிவு நிலவரம் என்ன என்பதில் குழப்பமான நிலை இருந்தது.

இந்நிலையில் உறுதியாக தமிழகத்தின் துல்லியமான வாக்குப்பதி நிலவரம் குறித்து தமிழக தலைமை தேர்தல் ஆணையர் செய்தியாளர் சந்திப்பில் அறிவிப்பார் என்று தகவல்கள் அவ்வப்போது வெளியாகின. ஆனால் இறுதி வரை அப்படி எந்தஒரு செய்தியாளர்கள் சந்திப்பும் நடைபெறவில்லை.

இப்படியான சமயத்தில் சில மணி நேரங்களுக்கு முன்பு இந்திய தேர்தல் ஆணையம் மீண்டும் மாநில வாரியாக வாக்கு பதிவு விவரங்களை வெளியிட்டு இருந்தது. அதில் ஏற்கனவே குறிப்பிட்டு இருந்தபடி தமிழகத்தில் 69.46 சதவீத வாக்குகள் பதிவையாகியதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் 72.47 வாக்குகள் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிகபட்சமாக தர்மபுரியில் 81.48 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 53.91% வாக்குகளும் பதிவாகியது.

மாவட்ட வாரியாக வாக்குப்பதிவு விவரங்கள்….

  1. திருவள்ளூர் – 68.31 %
  2. வட சென்னை – 60.13 %
  3. தென் சென்னை – 54.27 ச%
  4. மத்திய சென்னை – 53.91 %
  5. ஸ்ரீபெரும்புதூர் – 60.21 %
  6. காஞ்சிபுரம் – 71.55 %
  7. அரக்கோணம் – 74.08 %
  8. வேலூர் – 73.42 %
  9. கிருஷ்ணகிரி – 71.31 %
  10. தருமபுரி – 81.48 %
  11. திருவண்ணாமலை – 73.88 ச%
  12. ஆரணி – 75.65 %
  13. விழுப்புரம்- 76.47 %
  14. கள்ளக்குறிச்சி – 79.25 %
  15. சேலம்- 78.13 %
  16. நாமக்கல் – 78.16 %
  17. ஈரோடு – 70.54 %
  18. திருப்பூர் – 70.58 %
  19. நீலகிரி – 70.93 %
  20. கோவை – 64.81 %
  21. பொள்ளாச்சி -70.70 %
  22. திண்டுக்கல் – 70.99 %
  23. கரூர்- 78.61 %
  24. திருச்சி -67.45 %
  25. பெரம்பலூர் – 77.37 %
  26. கடலூர் – 72.28 %
  27. சிதம்பரம் – 75.32 %
  28. மயிலாடுதுறை – 70.06 %
  29. நாகப்பட்டினம் – 71.55 %
  30. தஞ்சாவூர்- 69.18 %
  31. சிவகங்கை – 63.94 %
  32. மதுரை – 61.92 %
  33. தேனி – 69.87 %
  34. விருதுநகர் -70.17 %
  35. ராமநாதபுரம் -68.18 %
  36. தூத்துக்குடி – 59.96 %
  37. தென்காசி – 67.55 %
  38. திருநெல்வேலி – 64.10 %
  39. கன்னியாகுமரி – 65.46 %

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live update
earthquake -Vanuatu
power cut update
pradeep john Weather update
karunanidhi mk stalin
premalatha
VidudhalaiPart2 Censor Details