வாக்காளர்கள் கவனத்திற்கு! இதற்கு அனுமதி கிடையாது… தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்!

tn election commission

Election2024: மக்களவை தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் முக்கிய அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.

இன்று நாடு முழுவதும் முதல்கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை 39 தொகுதிகளில் இன்று காலை 7 மணி முதல் வாக்காளர்கள் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர். தமிழகத்தில் 68,320 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், 6 கோடியே 23 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

இந்த சூழலில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. அந்தவகையில், வாக்காளர்கள் செல்போன்களுடன் சென்று வாக்களிக்க அனுமதி இல்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணையம் கூறியதாவது, செல்போன்களுடன் வாக்குசாவடிக்குள் வாக்காளர்கள் அனுமதிக்கமாட்டார்கள். செல்போன்களை வீட்டிலேயே வைத்துவிட்டு வருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் குறிப்பிட்ட சில வாக்குசாவடிகளில் செல்போன்களுடன் வந்த வாக்காளர்களை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் வாக்குசாவடி மையத்திற்குள் செல்லும்போது செல்போனுக்கு அனுமதி இல்லை என்றும் அதற்கு வெளியில் செல்போன் பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, வாக்காளர்கள் கவனத்துடன் செல்போன்களை வீட்டிலேயே வைத்துவிட்டு வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்