Election2024 : தமிழகத்தில் 181 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என தமிழக தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் புதுச்சேரி தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வாக்குப்பதிவு ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
ஏற்கனவே, தபால் வாக்குப்பதிவு பணிகள் தொடங்கி திருச்சி, ஈரோடு, கோவை என பல்வேறு பகுதிகளில் தபால் வாக்குகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. வருகிற ஏப்ரல் 18ஆம் தேதிக்குள் தமிழகத்தில் தபால் வாக்குகளை பெற தமிழ்நாடு தேர்தல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் வாக்குச்சாவடிகள் பாதுகாப்பு குறித்த இன்று தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாஹூ தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது தமிழக்த்தில் மொத்தமுள்ள 68,321 வாக்குசாவடிகளில் 8050 வாக்கு சாவடிகள் பதற்றமானவை என்றும், 181 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை என்றும் ஆலோசனை கூட்டத்தில் அறியப்பட்டுள்ளன.
மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளில், சிசிடிவி கேமிரா கண்காணிப்பு அதிகப்படுத்துவது, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு , துணை ராணுவம் பாதுகாப்பு ஆகியவற்றை அதிகப்படுத்துவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை: இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் உருவான படம் "மதகஜராஜா" திரைப்படம் 12 வருடங்களுக்கு பின்,…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்த விஜய், தொடர்ந்து தமிழகத்தில் ஆளும் திமுகவுக்கு எதிரான தனது…
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் L.B. நகர் கமினேனி மருத்துவமனையில் தானம் செய்யப்பட்ட இதயத்தை மருத்துவ பணியாளர்கள் 13 கிலோ…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வரும் நிலையில், இன்று சற்று ஆறுதல் அளிக்கும் வகையில்…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின்…
நியூ யார்க் : அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கும் நாள் நெருங்கிவிட்டது என்றே கூறவேண்டும். அதற்கான உறுதி…