தேர்தல் ஆணையம் சின்னம் ஒதுக்கீடு.. தமிழகத்தில் கமலஹாசனுக்கு சின்னம் ஒதுக்கவில்லை..!

தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற இன்னமும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சியினர் தேர்தல் பிரச்சாரம் மற்றும் கட்சி தொடர்பான ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி வருகின்றனர். அதே நேரத்தில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் சின்னங்களை ஒதுக்கீடு செய்துள்ளது. அதன்படி, டிடிவி தினகரன் அமமுக கட்சிக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கியது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னத்தை ஒதுக்கியது.
தேர்தல் ஆணையம் புதுச்சேரியில் கமலஹாசனின் மக்கள் நீதி மய்யத்திற்கு “பேட்டரி டார்ச்” சின்னத்தை ஒதுக்கியது. ஆனால் தேர்தல் ஆணையம் தமிழகத்தில் எந்த சின்னமும் ஒதுக்கவில்லை. அதேநேரத்தில், தமிழகத்தில் எம்.ஜி.ஆர் மக்கள் கட்சிக்கு “பேட்டரி டார்ச் லைட்” சின்னத்தை ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : மும்மொழி விவகாரம் முதல்…மகா சிவராத்திரி கொண்டாட்டங்கள் வரை!
February 27, 2025
யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதியா? சும்மா வதந்தி பரப்பாதீங்க..விளக்கம் கொடுத்த மகன்!
February 27, 2025
லோகேஷ் படத்தில் ஐட்டம் பாடல்! பூஜா ஹெக்டே வைத்து சன் பிக்சர்ஸ் போட்ட மாஸ்டர் பிளான்!
February 27, 2025
இந்தியால் அழிந்த இந்திய மொழிகள்., தமிழ் விழித்தது, பிழைத்தது! – மு.க.ஸ்டாலின் பதிவு!
February 27, 2025
விரைவில் அமலாகும் வக்பு வாரிய திருத்த மசோதா? மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
February 27, 2025