தேர்தல் ஆணைய ஆலோசனை கூட்டம் – கூட்டத்தில் அருகருகே ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்கள்..!
தேர்தல் ஆணைய ஆலோசனை கூட்டத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்கள் அருகருகே அமர்ந்துள்ளனர்.
தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு அவர்கள், இன்று தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் அட்டை இணைக்கும் பணி தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது. இக்கூட்டம் தொடங்கவுள்ள நிலையில், ஓபிஎஸ் தரப்பில் கோவை செல்வராஜ் முதல் ஆளாக கூட்டத்தில் கலந்து கொண்டார். அதனை தொடர்ந்து, பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த கூட்டத்தில் அருகருகே ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்கள் அருகருகே அமர்ந்துள்ளனர். இந்த நிலையில், கோவை செல்வராஜ் பக்கம் இருந்த பெயர் பலகையை தங்கள் பக்கம் ஜெயக்குமார் எடுத்து வைத்துக் கொண்டுள்ளார்.