Elections2024 : தேர்தல் அட்டவணை அறிவிப்பு! தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன!
Elections2024 தமிழகத்தில் மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான அட்டவணையை இந்திய தலைமை தேர்தல் அதிகாரி ராஜீவ் குமார் இன்று டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டார். தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியான நிலையில், தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துள்ளது.
read more- மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 முதல் 7 கட்டங்களாக நடைபெறும் – தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு
இதனையடுத்து, சென்னை தலைமை செயலகத்தில் இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அமைச்சர்களின் புகைப்படங்கள் அகற்றப்பட்டன. இதேபோல, மாநிலம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களிலும் உள்ள படங்கள் அகற்றப்பட்டு வருகிறது. அதைப்போலவே, பொதுவெளியில் உள்ள தலைவர்களின் சிலைகளும் மூடப்பட்டு வருகிறது.
Read More – ராகுல் காந்தியின் ஒற்றுமை நியாய யாத்திரை நிறைவு.! மும்பைக்கு விரையும் தலைவர்கள்…
தேர்தல் விதிகள்
- சமூக வலைதளங்களில் கருத்து கூற உரிமை உள்ளது. ஆனால், வதந்தியான தகவலை பரப்ப கூடாது. தவறான செய்திகளை நீக்க மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அதிகாரம் உண்டு.
- சட்டவிரோதம் மற்றும் சந்தேகத்திற்கு இடமான ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகள் தீவிரமாக கண்காணிக்கப்படும்
- ஏடிஎம் மாலை 6 மணிக்கு மேல் பணத்தை நிரப்பக் கூடாது.
- உறுதி செய்யப்படாத, திசை திருப்பக் கூடிய விளம்பரங்களை அரசியல் கட்சிகள் வெளியிடக் கூடாது.
- பணம், பரிசுப் பொருட்கள், மதுபானம், போதைப்பொருள் நடமாட்டம் தடுக்கப்படும்
- சாதி, மத அடிப்படையில் வாக்கு சேகரிக்க கூடாது
- தேர்தல் பிரச்சாரத்தின் போது அரசியல் கட்சிகள் வெறுப்பு பேச்சுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
- மாலை, இரவு நேர்ங்களில் வங்கிகள் வாகனங்களில் பணம் எடுத்துச் செல்ல கூடாது.
- சிறுவர்களை தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்தக் கூடாது.
- மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் வகையில் எந்த ஒரு செயலையும் செயல்படக் கூடாது .