வெள்ளலூர் பேரூராட்சி தலைவர் தேர்வுக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றபோது அதிமுக – திமுகவினர் இடையே கடும் மோதல்.
கோவை மாவட்டத்தில் வெள்ளலூர் பேரூராட்சியில் கடந்த 4-ஆம் தேதி நடைபெற்ற மறைமுக வாக்குபதிவின்போது, பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டது. இறுதியில் வாக்குப்பெட்டி உடைத்து தூக்கி வீசப்பட்டது. இந்த சூழலில், இன்று கோவை மாவட்டம் வெள்ளலூர் பேரூராட்சிக்கு மறைமுகத்தேர்தல் நடைபெற்று வருகிறது.
வெள்ளலூரில் மறைமுக தேர்தலின்போது அதிமுக – திமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டதால், அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இந்த மோதலின்போது கவுன்சிலரின் கணவர் மண்டை உடைந்ததாக கூறப்படுகிறது. மதுக்கரை 4-ஆவது வார்டு திமுக கவுன்சிலரின் கணவர் செந்தில்குமாரின் மண்டை உடைந்தது. மோதலை தடுக்க போலீசாரின் தடியடில் திமுக தொண்டரின் மண்டை உடைந்தது.
திமுக – அதிமுக மோதலை தொடர்ந்து காவல்துறையினர் பிரச்சனை செய்தவர்களை தடியடி நடத்தி விரட்டியடித்தனர். மேலும், கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி பேரூராட்சி துணைத் தலைவர் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், 4வது வார்டு திமுக உறுப்பினரின் கணவருக்கு அரிவாள் வெட்டு என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, வெள்ளலூரில் மொத்தமுள்ள 15 வார்டில் திமுக – 6, அதிமுக – 8, சுயேட்சை – 1 வார்டுகளில் வென்றுள்ள நிலையில், இன்று வெள்ளலூர் பேரூராட்சி தலைவருக்கான மறைமுக தேர்தல் நடைபெற்று வருகிறது. ஆனால், திமுக – அதிமுக இடையே கடும் மோதலால் பரபரப்பு நிலவி வருகிறது.
இதுபோன்று, திருமங்கலம் நகராட்சி தலைவர், துணைத்தலைவருக்கான இன்று மறைமுக தேர்தலின்போது மோதல் ஏற்பட்டுள்ளது. கட்சி தலைமை அறிவித்த வேட்பாளரை எதிர்த்து திமுக நகர செயலாளர் முருகன் தனது மருமகளை நிறுத்தியதால் மோதல் ஏற்பட்டுள்ளது.
துபாய் : இந்த வருட சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தி வருகிறது. ஆனால், துரதிஷ்டவசமாக பாகிஸ்தான்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதற்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று எலான் மஸ்கின் தீவிர…
சென்னை : தமிழகத்தில் சமீபகாலமாக பல்வேறு இடங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சி…
சென்னை : முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. 2025-26 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டிய…
நாகர்கர்னூல் : தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையில் கடந்த சனிக்கிழமை காலை…
வங்கதேசம் : வங்காள விரிகுடாவில் இன்று அதிகாலை 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம்…