திருச்சி மேற்கு தொகுதி தேர்தல் ரத்து செய்யப்படும் என்று வெளியான செய்தியில் உண்மை இல்லை என்றும், வதந்திகளை நம்பவேண்டாம்.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றன.ர் அந்த வகையில், திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதியில் இருக்கும் ஐந்து காவல் நிலையங்களில் பணப்பட்டுவாடா நடந்துள்ளது தெரிய வந்ததை அடுத்து, அங்குள்ள காவல் நிலையங்களில் சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் கவர்கள் சிக்கியுள்ளது.
அந்தக் அவர்களில் பதவிக்கு ஏற்ப ரூ 2,000 முதல் 10,000 வரை வைக்கப்பட்டிருந்தது இதனையடுத்து காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர் உட்பட 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதோடு, அந்த கவர்கள் திமுக சார்பில் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து திமுக திருச்சி மேற்கு தொகுதி வேட்பாளர் கே.என்.நேரு மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிமுக வேட்பாளர் பத்மநாதன் மாவட்ட வருவாய் அலுவலரிடம் புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து திருச்சி மேற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் தேர்தல்கள் ரத்தாகும் என்று செய்திகள் வெளியாகி வருகிறது.
இது குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘முசிறி மற்றும் மணப்பாறை உள்ளிட்ட இடங்களில் இதுவரை ஒரு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பணப்பட்டுவாடா தேர்தல் விதிமுறைகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க கூடுதல் பறக்கும் படை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பணப்பட்டுவாடா தொடர்பாக திருச்சி மேற்கு தொகுதி தேர்தல் ரத்து செய்யப்படும் என்று வெளியான செய்தியில் உண்மை இல்லை என்றும், வதந்திகளை நம்பவேண்டாம் என்றும், அதிகாரபூர்வ தகவல் வந்தால், நாங்கள் மக்களுக்கு என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…