vck election campaign digitally [file image]
VCK: மக்களவை தேர்தலை முன்னிட்டு புதிய யுத்தியை கையில் எடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது.
தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான தேதி நெருங்கி வரும் நிலையில், தேர்தல் களம் அனல் பறக்க இருக்கிறது. திமுக, அதிமுக, நாம் தமிழர் மற்றும் பாஜக ஆகிய கட்சிகளின் தலைவர்கள் தங்களது வேட்பளர்களையும், கூட்டணி கட்சிகளின் வேட்பார்களையும் ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் சிலர் நூதன முறையில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில், தொல் திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சி புதிய யுத்தியை கையில் எடுத்துள்ளது. அதாவது, தங்களது கட்சி, வாக்குறுதிகள் மற்றும் கருத்துக்களை மக்களிடம் எளிதாக கொண்டு செல்லும் வகையில் டிஜிட்டல் முறையில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் விசிக தலைவர் திருமாவளவன்.
திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக சிதம்பரம், விழுப்புரத்தில் போட்டியிடுகிறது. சிதம்பரம் தனி தொகுதியில் போட்டியிடும் விசிக தலைவர் திருமாவளவன், கடந்த ஒரு வாரமாக மக்களை சந்தித்து தீவிரப் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். இந்த சூழலில் இளைஞர்களையும், மக்களையும் கவரும் விதமாக டிஜிட்டல் முறையில் ‘கியூஆர் கோடு’ மூலம் பரப்புரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி, சமீபத்தில் தான் இந்த கியூஆர் கோடு பிரச்சாரத்தை விசிக தலைவர் தொடங்கி வைத்தார். இதையடுத்து தேர்தல் பிரச்சார வாசகங்களுடன், கியூஆர் கோடு இடம்பெற்ற போஸ்டர்கள் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளது. இந்த கியூஆர் கோடு’-ஐ செல்போனில் ஸ்கேன் செய்தால், திருமாவளவன் பேசும் வீடியோ ஒன்று ஒளிபரப்பாகும்.
அதில், மக்களவை தேர்தலின் முக்கியத்துவம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து எடுத்துரைப்பதாக கூறப்படுகிறது. அதேபோல், விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் விசிக வேட்பாளர் ரவிக்குமாரின் டிஜிட்டல் பிரச்சாரத்திற்கான கியூஆர் கோடு போஸ்டர் பிரச்சாரத்தை அமைச்சர் பொன்முடி இன்று தொடங்கி வைத்தார். பல்வேறு முறைகளில் பிரச்சாரம் நடந்து வரும் நிலையில் விசிக டிஜிட்டல் யுத்தியை கையில் எடுத்துள்ளது.
லக்னோ : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
லக்னோ : இன்று (ஏப்ரல் 1) நடைபெறும் ஐபிஎல் 2025 சீசனின் 13வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்…
சென்னை : தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்கள் மூலம் எடுத்து ஹிட் கொடுத்து சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர்…
லக்னோ : தேசிய கல்வி கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோட்பாடுகளில் ஒன்று மும்மொழி கொள்கை. இந்த மும்மொழி கொள்கை…
கேரளா : மலையாள நடிகர் மோகன்லாலின் ''எம்புரான்'' படம் ஒரு புறம் வசூல் சாதனை செய்தாலும், மறுபுறம் சர்ச்சைகளால் சூழந்துள்ளது.…
சென்னை : ஐபிஎல் திருவிழா ஆரம்பித்துவிட்டது. அதில் வழக்கம் போல புதிய இளம் வீரர்கள் நட்சத்திரங்களாக ஜொலிக்க ஆரம்பித்துள்ளனர். அவர்களுடன்…