#ELECTION BREAKING: அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு…!

Default Image

அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்தானது.

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் 12-ம் தேதி தொடங்கவுள்ளதால் அனைத்து கட்சிகளும் தொகுதி பங்கீடு, கூட்டணி  உள்ளிட்ட பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. இதனால், அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக கடந்த சில நாட்களாக தொடர்ந்து சட்டப்பேரவை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் வந்தனர்.

இதுவரை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அதிமுக – பாஜக இடையே தொகுதி பங்கீடு சுலபமான முடிவு எட்டப்படவில்லை, தொடர்ந்து இழுபறியில் இருந்து வந்தது. இந்நிலையில், அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்தானது.

மேலும், இடைத்தேர்தல் நடைபெற உள்ள கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளருக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தனது முழு ஆதரவை அளிக்கும் என்றும் உடன்பாட்டில் குறிப்பிட்டு இரு கட்சித் தலைவர்களிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தத்தில் அதிமுக சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பாஜக சார்பில் சிடி ரவி மற்றும் பாஜக மாநில தலைவர் எல் முருகன் உள்ளிட்டோர் கையெழுத்திட்டுள்ளனர். ஏற்கனவே அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவிற்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Image

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்