வட சென்னை மக்களவைத் தொகுதி 2008 ஆம் ஆண்டு செய்யப்பட்ட மறுசீரமைப்பிற்கு முன் இராயபுரம், துறைமுகம், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், பெரம்பூர் (தனி), திருவொற்றியூர், வில்லிவாக்கம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இருந்தன. மறுசீரமைப்பிற்கு பிறகு பெரம்பூர் பொதுத்தொகுதியாக மாற்றப்பட்டது. வில்லிவாக்கம் பிரிக்கப்பட்டு கொளத்தூர், திரு.வி.க.நகர் (தனி) எனும் சட்டமன்றத் தொகுதிகள் உருவாக்கப்பட்டன.
வடசென்னை தொகுதி திமுகவின் கோட்டையாகவே பார்க்கப்படுகிறது. காரணம் திமுக இதுவரை 11 முறையும், காங்கிரஸ் 3 முறையும், அதிமுக ஒரு முறையும், சுயேட்சை வேட்பாளர் ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளனர். இந்த தொகுதியில் முதல்முறையாக 1957-ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. அப்போது சுயேட்சை வேட்பாளர் அந்தோணி பிள்ளை என்பவர் வெற்றி பெற்றார். பின்னர் 1962 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சீனிவாசனும், 1967, 1971 ஆம் ஆண்டு திமுகவை சேர்ந்த மனோகரன் என்பவர் தொடர்ந்து 2 முறை வெற்றி பெற்றார்.
பின்னர் திமுகவை சார்ந்த 1977-ம் ஆண்டு ஏ.வி.பி.ஆசைத்தம்பி, 1980-ம் ஆண்டு கோ.லட்சுமணன், 1984-ம் ஆண்டு என்.வி.என்.சோமு ஆகியோர் வெற்றி பெற்றனர். இதன் மூலம் திமுக 1967 முதல் 1984 வரை தொடர்ந்து ஐந்து முறை வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து 1989, 1991 ஆகிய இரண்டு தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த தா.பாண்டியன் என்பவர் தொடர்ந்து 2-முறை வெற்றி பெற்றுள்ளார்.
அடுத்து நடைபெற்ற 1996 -ம் ஆண்டு என்.வி.என்.சோமு (திமுக), 1998,1999 மற்றும் 2004-ம் ஆண்டு செ.குப்புசாமி (திமுக), 2009 -ம் ஆண்டு டி.விகே எஸ் இளங்கோவன் (திமுக) வெற்றி பெற்றனர். இதன் மூலம் திமுக மீண்டும் தொடர்ச்சியாக ஐந்து முறை வெற்றி பெற்றது. முதல்முறையாக அதிமுக சார்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் டி.ஜி வெங்கடேஷ் பாபு வெற்றி பெற்றார்.
2019 நாடாளுமன்ற தேர்தல்:
பின்னர் கடைசியாக 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுகவை சேர்ந்த கலாநிதி வீராசாமி வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் மொத்தம் 23 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் 10 வேட்பாளர்கள் கட்சி சார்பாகவும், 13 வேட்பாளர்கள் சுயேட்சையாகவும் போட்டியிட்டனர். திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி, தேமுதிக வேட்பாளரான அழகாபுரம் ஆர். மோகன்ராஜை 4,61,518 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி 5,90,986 வாக்குகளும், தேமுதிக வேட்பாளரான அழகாபுரம் ஆர். மோகன்ராஜ் 1,29,468 வாக்குகளும் பெற்றார்.
வட சென்னை மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன:
திருவொற்றியூர்
ராதாகிருஷ்ணன் நகர்
பெரம்பூர்
கொளத்தூர்
திரு.வி.க. நகர் (தனி)
இராயபுரம்
2021-ம் ஆண்டு சட்ட மன்ற தேர்தல் முடிவுகள்:
கே. பி. சங்கர்(திமுக) = 88,185 (வாக்குகள்)
கே.குப்பன் (அதிமுக) = 50,524 (வாக்குகள்)
ஜே. ஜே. எபினேசர் (திமுக) = 95,763 (வாக்குகள்)
ஆர்.எஸ். ராஜேஷ் (அதிமுக) = 53,284 (வாக்குகள்)
ஆர். டி. சேகர் (திமுக) = 105267 (வாக்குகள்)
என்.ஆர். தனபாலன் (அதிமுக) = 50,291 (வாக்குகள்)
மு.க.ஸ்டாலின் (திமுக) = 105522 (வாக்குகள்)
ஆதி ராஜாராம் (அதிமுக) = 35,138 (வாக்குகள்)
ஐட்ரீம் இரா. மூர்த்தி (திமுக) = 64,424 (வாக்குகள்)
ஜெயக்குமார் (அதிமுக) = 36,645 (வாக்குகள்)
வாக்காளர்கள் எண்ணிக்கை:
கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் படி வட சென்னை நாடாளுமன்ற தொகுதியில் 14,84,689 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 7,24,968 பேரும், பெண் வாக்காளர்கள் 7,59,208 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 513 பேர் உள்ளனர்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…