#Election:சற்று முன்…510 ஊரக,நகர்ப்புற உள்ளாட்சி பதவியிடங்கள் – தொடங்கியது இடைத்தேர்தல்!
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாகவுள்ள இரண்டு மாவட்ட கவுன்சிலர்,20 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள்,40 ஊராட்சி தலைவர்கள்,436 கிராம ஊராட்சி உறுப்பினர்கள்,மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் காலியாகவுள்ள இரண்டு மாநகராட்சி கவுன்சிலர்கள்,இரண்டு நகராட்சி கவுன்சிலர்கள்,8 பேரூராட்சி கவுன்சிலர் என மொத்தம் 510 பதவியிடங்களுக்கு ஜூலை 9 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
குறிப்பாக,ஊரக,நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பொறுப்பு வகித்து வந்தவர்களில் சிலர் உயிரிழந்ததாலும்,சிலர் பதவி விலகியதாலும் அந்த இடங்கள் காலியான நிலையில்,அப்பகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
இந்நிலையில்,தமிழகத்தில் காலியாகவுள்ள 510 ஊரக,நகர்ப்புற உள்ளாட்சி பதவியிடங்களுக்கு இடைத்தேர்தல் தொடங்கியுள்ளது.அதன்படி,இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில்,மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு முடிவடைகிறது.மேலும்,கொரோனவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ள வாக்காளர்கள் மாலை 5 மணி முதல் 6 மணி வரை வாக்களிப்பதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து,தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூலை 12 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே,வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமராக்களும் அமைக்கப்பட்டுள்ளன.மேலும்,பதற்றமான வாக்குச்சாவடிகளில் இணையவழி கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.அதே சமயம்,இடைத்தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களுக்கு இன்று பொது விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.