பெண்களுக்கு மாதம் ரூ.3000.. ரூ.10 லட்சம் வைப்பு தொகை… பாமக தேர்தல் வாக்குறுதிகள்…

PMK Anbumani Ramadoss

PMK : 40 வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் வாக்குறுதிகளை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி, பாஜக தலைமையிலான கூட்டணியில் தேர்தலை சந்திக்கிறது. பாஜக கூட்டணியில் பாமக 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மனைவி சௌமியா அன்புமணி தர்மபுரியிலும், இயக்குனர் தங்கர்பச்சான் கடலூர் தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள்.

வேட்பாளர்கள் அறிவிப்பு, வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் நிறைவு செய்யப்பட்டதை அடுத்து, தற்போது பாமகவின் தேர்தல் வாக்குறுதிகளை பாமக நிறுவனர் ராமதாஸ் தற்போது வெளியிட்டுள்ளார். அதில் 40 வாக்குறுதிகளை பாமக அறிவித்துள்ளது. அதில் முக்கியமான சில வாக்குறுதிகளை இதில் காணலாம்…

  • மாநிலம் முழுவதும் சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தப்படும்.
  • தமிழகத்தில் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வலியுறுத்தப்படும்.
  • சென்னை உயர்நீதிமன்றத்தில் அலுவல் மொழியாக தமிழ் மொழியை அறிவிக்க வலியுறுத்தப்படும்.
  • அனைத்து சாதியினருக்கும் மக்கள் தொகைக்கு இணையாக இட ஒதுக்கீடு அளிக்க வலியுறுத்தப்படும்.
  • கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு அளவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • மாநில அரசுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்குதல்.
  • வரி வருவாய் மானியத்தில் தமிழகத்திற்கு கிடைக்கும் பங்கை அதிகரிக்க செய்ய வேண்டும்.
  • இந்தியாவில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் குடும்ப தலைவிகளுக்கு மாதம் 3000 ரூபாய் உரிமை தொகை வழங்க ஏற்பாடு செய்ய வலியுறுத்தப்படும்.
  • பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்காக  கல்வி மற்றும் இதர செலவுகளுக்கு 10 லட்சம் ரூபாய் வைப்பு நிதியாக அளிக்க வழிவகை செய்யப்படும்.
  • அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யப்படும்.

இவ்வாறான 40 வாக்குறுதிகளை பாமக சார்பில் தேர்தல் வாக்குறுதிகளாக அறிவிக்கப்பட்டுளளன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Election Result
Maharashtra Election 2024 Result
bjp bihar
Priyanka Gandhi - Wayanad
vijay tvk
Wayanad By polls
congress win karnataka 2024