புற்றுநோயால் இறந்த மூத்த மகன் – தற்கொலை செய்துகொண்ட குடும்பத்தினர்!

Default Image

மூத்த மகன் புற்றுநோயால் உயிரிழந்த சோகம் தாங்க முடியாமல் தங்களது இரண்டு குழந்தைகளையும் கொன்றுவிட்டு கணவன் மனைவி தற்கொலை செய்து உயிர் இழந்துள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள பொன்னம்மாபேட்டை வாய்க்கால் பட்டறை அருகே உள்ள பகுதியை சேர்ந்த 38 வயதுடைய முருகன் என்பவர் சலூன் கடையில் வேலை பார்த்து வருபவர். இவரது மனைவி கோகிலா வீட்டில் குழந்தைகளை பராமரித்து வருகிறார். இவர்களுக்கும் மதன்குமார், வசந்தகுமார், கார்த்திக் எனும் மூன்று மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் முருகனின் மூத்த மகன் மதன்குமார் சில ஆண்டுகளாக ரத்த புற்று நோயால் மிகவும் அவதிப்பட்டு பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் புதுச்சேரியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் மதன்குமார் புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மதன்குமார் இழப்பு குடும்பத்தினருக்கு தாங்கிக்கொள்ள முடியாத ஒன்றாக இருந்துள்ளது. இருப்பினும் அடுத்த இரு மகன்களை நினைத்து குடும்பம் அழகாக வாழ்ந்து இருக்கலாம். ஆனால், முருகன் கோகிலா ஆகிய இருவருக்கும் மூத்த மகனின் நினைப்பு சற்றும் அழிக்கப்படாமல் இருந்ததால் அடிக்கடி மகனின் புகைப்படத்தை செல்போனில் பார்த்துக் கொண்டே இருந்துள்ளனர்.

மகன் இறந்து ஒன்பது மாதங்களுக்குப் பிறகு அவர்களது மன அழுத்தம் காரணமாக அவர்களின் இரண்டாவது மற்றும் மூன்றாவது மகனுக்கு தம்பதிகள் இருவருமாக சேர்ந்து முடிவெடுத்து டீயில் விஷம் கலந்து கொடுத்து அவர்களை குடிக்க வைத்துள்ளனர். அதன்பின் இருவரும் உயிரிழந்துள்ளனர், பின்னர் அவர்களும் அந்த டீயை குடித்து தாங்களாகவே தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அருகில் இருந்தவர்கள் கதவு திறக்கப்படாததால் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன்பின் அவர்கள்  டீயில் விஷம் கலந்து குடித்து உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. மூத்த மகன் இழப்பு தாங்க முடியாமல் மன அழுத்தத்தால் குடும்பமே தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Tamilnadu CM MK Stalin - TN Budget 2025 Rupees symbol
world cup 2027
TN Budget - TN Govt
train hijack pakistan
DMK - Revanth Reddy
udhayanidhi stalin annamalai