காசி யாத்திரை சென்ற முதியவர்கள்! மீண்டும் சொந்த திரும்ப இயலாமல் தவிப்பு! உதவி கரம் நீட்டிய பெரம்பலூர் எம்.பி!

Default Image

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து, 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால், வெளியூர் சென்றவர்கள் மீண்டும் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். 

இந்நிலையில், பெரம்பலூர் பகுதியில் இருந்து 56 முதியவர்கள் காசிக்கு யாத்திரை சென்றுள்ளனர். ரயில் மூலமாக சென்ற நேரத்தில் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுவிட்டதால் அவர்களால் தமிழகம் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். 

இதுப்பற்றிய தகவல் பெரம்பலூர் நாடாளமன்ற தொகுதி எம்.பியான பாரிவேந்தரிடம் 56 பேரின் உறவினர்கள் தெரிவித்து ஊர் திரும்ப உதவி செய்யுமாறு கேட்டுள்ளனர். நிலைமையை அவர்களிடம் விவரித்த பாரிவேந்தர் அவர்கள் உடனடியாக ஊர் திரும்ப வாய்ப்பில்லை. அவர்கள் தங்கியுள்ள இடத்திலேயே வசதி செய்து தர ஏற்பாடு செய்கிறேன் என கூறியுள்ளார். 

இதனையடுத்து, காசியில் உள்ள அவர்களிடம் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு நலம் விசாரித்துள்ளார். அதோடு அவர்கள் தங்கியுள்ள காசி ஸ்ரீ குமாரசாமி மடத்தின் நிர்வாகத்திடம் பேசி, அவர்களுக்குத் தேவையான உணவு, இருப்பிடத்துக்கான கட்டணத்தைத் தனது சொந்த நிதியில் இருந்து அனுப்பி வைப்பதாகவும், அவர்களைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதனை தொடர்ந்து, முதியவர்களின் பராமரிப்பு செலவுக்காக அந்த மட நிர்வாகத்துக்காக 1 லட்சத்து 12 ஆயிரம் ரூபாயை அவர்களது வங்கி கணக்குக்கு அனுப்பியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்