பெண் குழந்தைகள் சமீபகாலமாகவே பாலியல் சீண்டல்கள் குழந்தை தொழிலாளர்கள் என பல கொடுமைக்கு ஆளாகின்றன.இது மட்டும் இல்லாமல் பெண் குழந்தைகளை பணத்திற்காக விற்பனை செய்யும் கொடுமைகளும் நடந்து கொண்டே உள்ளது.
இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள குடவாசல் பகுதியை சேர்ந்த விஜயலட்சுமி என்ற முதியவர் இடைத்தரகரிடம் தனது இரண்டு பேத்திகளையும் ரூபாய் 20,000 -த்தை பெற்றுக்கொண்டு விற்பனை செய்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து குடவாசல் கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த தகவலின் அடைப்படையில் காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் முதற்கட்ட விசாரணையில் அந்த சிறுமிகள் திருப்பூரில் உள்ள நூல் ஆலையில் வேலைசெய்து வருவது தெரியவந்துள்ளது.பின்னர் அந்த முதியவரையும் அவருக்கு இடைத்தரகராக செயல்பட்ட கனகம் என்ற சகுந்தலாவையும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றன.
மேலும் அவர்கள் மீது குழந்தை தொழிலாளர் தடுப்புச் சட்டத்தின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து குழந்தையை யாருக்கு விற்றனர்,குழந்தையின் பெற்றோர் யார் என விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
டெல்லி : ஆண்டுதோறும் எந்த ஒரு துறையிலும், சிறந்து விளங்கும் ஒருவருக்கு, இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான (2025)…
சென்னை : திமுக தலைமையிலான அமைச்சரவையில் 6வது முறையாக அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின்படி அமைச்சரைவை இலாகாக்களில் மாற்றம்…
ரஷ்யா : மற்றும் உக்ரைன் இடையே நடந்து வரும் போர் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இன்னும் நிற்காமல் தொடர்ச்சியாக நடந்து வருவது…
ஹைதராபாத் : நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ரெட்ரோ. இந்த திரைப்படம் வரும்…
கோவை : கடந்த 2019 பிப்ரவரி மாதம் தமிழகத்தையே அதிர வைக்கும் வண்ணம் பாலியல் வழக்கு ஒன்று வெளிச்சத்திற்கு வந்தது.…