சிறுமிகளை பணத்திற்காக விற்பனை செய்த முதியவர்!திருவாரூரில் பயங்கரம்!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
- மூதாட்டி ஒருவர் 20,000 பணத்திற்காக இரண்டு சிறுமிகளை விற்பனை செய்துள்ளார்.
- சிறுமிகளை காப்பாற்ற காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுவருகின்றன.
பெண் குழந்தைகள் சமீபகாலமாகவே பாலியல் சீண்டல்கள் குழந்தை தொழிலாளர்கள் என பல கொடுமைக்கு ஆளாகின்றன.இது மட்டும் இல்லாமல் பெண் குழந்தைகளை பணத்திற்காக விற்பனை செய்யும் கொடுமைகளும் நடந்து கொண்டே உள்ளது.
இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள குடவாசல் பகுதியை சேர்ந்த விஜயலட்சுமி என்ற முதியவர் இடைத்தரகரிடம் தனது இரண்டு பேத்திகளையும் ரூபாய் 20,000 -த்தை பெற்றுக்கொண்டு விற்பனை செய்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து குடவாசல் கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த தகவலின் அடைப்படையில் காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் முதற்கட்ட விசாரணையில் அந்த சிறுமிகள் திருப்பூரில் உள்ள நூல் ஆலையில் வேலைசெய்து வருவது தெரியவந்துள்ளது.பின்னர் அந்த முதியவரையும் அவருக்கு இடைத்தரகராக செயல்பட்ட கனகம் என்ற சகுந்தலாவையும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றன.
மேலும் அவர்கள் மீது குழந்தை தொழிலாளர் தடுப்புச் சட்டத்தின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து குழந்தையை யாருக்கு விற்றனர்,குழந்தையின் பெற்றோர் யார் என விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
லேட்டஸ்ட் செய்திகள்
INDvENG : 2வது ஒருநாள் போட்டி எப்படி இருக்கும்? பிட்ச் நிலை, வானிலை நிலவரம், வீரர்கள் விவரம் இதோ..,
February 8, 2025![IND vs ENG 2nd ODI cricket match](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/IND-vs-ENG-2nd-ODI-cricket-match.webp)
நோட் பண்ணிக்கோங்க..’ரோஹித் சர்மா தான் தாக்கத்தை ஏற்படுத்துவார்”..கெவின் பீட்டர்சன் பேச்சு!
February 8, 2025![rohit sharma Kevin Pietersen](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/rohit-sharma-Kevin-Pietersen.webp)
“பயிற்சி செய்வது பயனளிக்காது”.. பழைய ஃபார்முக்கு வருவதற்கு ரோஹித்துக்கு யோசனை சொன்ன சஞ்சய் பங்கர்.!
February 8, 2025![](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/IND-rohit-sharma-.webp)
டெல்லியில் பாஜக வெற்றி! மக்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி!
February 8, 2025![narendra modi HAPPY](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/narendra-modi-HAPPY-.webp)