#BREAKING: வேகமெடுக்கும் கொரோனா – திருப்பூரில் முதியவர் உயிரிழப்பு!
திருப்பூரில் கொரோனா தொற்று காரணமாக 82 வயது முதியவர் உயிரிழந்தார்.
இந்தியா முழுவதும் தற்போது கொரோனா தொற்று என்பது நாளுக்கு நாள் சற்று அதிகரித்து வருகிறது. இதனால் மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது. மாநிலத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
திருப்பூர் ஆண் :
திருப்பூரில் கொரோனா பாதிப்பால் சுப்ரமணியன் என்ற 82 வயது முதியவர் உயிரிழந்துள்ளார். சமீபத்தில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும், உயிரிழந்தவரின் மனைவி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
தூத்துக்குடி ஆண் :
முன்னதாக இன்று, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த பார்த்திபன் எனும் 55 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என தகவல் வெளியாகியுள்ளது. இவர் கடந்த 23ஆம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
காரைக்கால் பெண் :
இதற்கிடையில், நேற்று காரைக்காலில் 35 வயது மதிக்கத்தக்க பெண் கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வந்தநிலையில் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து காரைக்கால் முழுவதும் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயமாக அணிய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.