இஸ்லாமிய சொந்தங்கள் அனைவருக்கும் பக்ரீத் வாழ்த்து – த.வெ.க தலைவர் விஜய்!

vijay

பக்ரீத் : உலகம் முழுவதும் (ஜூன் 17) இன்று பக்ரீத் பண்டிகை கோலாகலமாக கொண்டாடபட்டு வருகிறது. தமிழகத்திலும், பக்ரீத் விழாவை மக்கள் கொண்டாடி வரும் நிலையில், பல அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை சமூக வலைத்தளங்களின் மூலம் மக்களுக்கு தெரிவித்து வருகிறார்கள்.

குறிப்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கவிஞர் வைரமுத்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.  அந்த வகையில், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய் இஸ்லாமிய சொந்தங்கள் அனைவருக்கும் பக்ரீத் வாழ்த்து என தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது ” அன்பு, தியாகம், அர்ப்பணிப்பு, ஒற்றுமை ஆகிய நற்குணங்களை எடுத்துரைக்கும் வகையில் உலகெங்கும் உள்ள இசுலாமிய சகோதர சகோதரிகளால் பக்ரீத் பண்டிகை, தியாகத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் இசுலாமிய சொந்தங்கள் அனைவருக்கும் என் இனிய பக்ரீத் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.” என கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்