முட்டை விலை 25 காசுகள் உயர்ந்து 5.05 காசுக்கு விற்பனை…!
நாமக்கல்லில் முட்டை விலை 5.05 காசுகளாக விற்பனையாகிறது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் ஏற்பட்ட துவக்கத்தில் அதிகளவில் அடி வாங்கிய வியாபாரம் என்றால் அது முட்டை வியாபாரம். ஆம் 1 ரூபாய்க்கும் கீழ் குறைந்து மிகவும் அதிகளவில் சீப்பாக குப்பைகளிலும் கொட்டப்பட்டது.
இதற்கு பின் வேகமாக முட்டை விலை உயர்ந்து மற்றும் குறைந்து வருகிறது. இந்த நிலையில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பில் ஆலோசனைக் கூட்டம் தலைவர் மருத்துவர் பி. செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் முட்டையின் விலை அதிகரிக்க முடிவு செய்துள்ளனர் . அதன் படி இன்று ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 25 காசுகள் உயர்ந்து ரூ.5.05 காசுகளாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும் புரட்டாசி மாத மாக இருந்தாலும் தமிழகம் மற்றும் கேரளா மற்றும் வடமாநிலங்களில் தேவை அதிகரிப்பு காரணமாக முட்டை விலை உயர்ந்துள்ளது என்று கோழிப் பண்ணையாளர்கள் கூறியுள்ளார்கள்.