முட்டை விலை 30 காசுகள் குறைவு.!

Default Image

நாமக்கல் மண்டலத்தில் நேற்றைய முட்டை கொள்முதல் விலை 30 காசுகள் குறைந்து ரூ.4.20 ஆக விலை நிர்ணயம்.

கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்ட துவக்கத்தில் அதிகளவில் அடி வாங்கிய வியாபாரம் என்றால் அது முட்டை வியாபாரம். முட்டை விலை கிட்டத்தட்ட 1 ரூபாய்க்கும் கீழ் குறைந்து விற்பனை செய்யப்பட்டது. அதற்கு பிறகு முட்டை விலை ஏற்றம் மற்றும் இறக்கத்தை கண்டு வருகிறது.

இந்நிலையில், நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலையை 30 காசுகள் குறைக்க முடிவு செய்தனர். அதன்படி நாமக்கலில் முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.4.50 லிருந்து 30 காசுகள் குறைந்து, ரூ.4.20 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் முட்டை விலை ரூ.5.00.க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்