இன்றைய (09.08.2021) முட்டை விலை.!
நாமக்கல் மண்டலத்தில் நேற்றைய முட்டை கொள்முதல் விலை ரூ.4.70 லிருந்து 20 காசுகள் குறைந்து ரூ.4.50 ஆக விலை நிர்ணயம்.
கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்ட துவக்கத்தில் அதிகளவில் அடி வாங்கிய வியாபாரம் என்றால் அது முட்டை வியாபாரம். முட்டை விலை கிட்டத்தட்ட 1 ரூபாய்க்கும் கீழ் குறைந்து விற்பனை செய்யப்பட்டது. அதற்கு பிறகு முட்டை விலை ஏற்றம் மற்றும் இறக்கத்தை கண்டு வருகிறது.
நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு மண்டல ஆலோசனைக் கூட்டம், தலைவர் செல்வராஜ் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் முட்டை விலை நிர்ணயம் குறித்து ஆலோசிக்கப்பட்டு, ரூ.4.70 ஆகி வந்த முட்டையின் விலை இன்று 20 காசுகள் குறைந்து ரூ.4.50 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கொரோனா கட்டுப்பாடுகளால் முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளதால் விலை குறைப்பு என கோழிப் பண்ணையாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.