MINISTER SEKAR BABU [FILE IMAGE]
இந்து அறநிலையத்துறை செயல்பாடுகளுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் அவதூறு பரப்படுவதாக அத்துறை அமைச்சர் சேகர் பாபு குற்றசாட்டியுள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், அறநிலையத்துறை தொடர்பாக வாட்ஸ் அப் மூலம் பரப்பப்படும் அவதூறுகளுக்கு திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்தார். இதுவரை இல்லாத வகையில் 30 மாதங்களில் இந்து அறநிலையத்துறை பல்வேறு சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
கோயபல்ஸ் தத்துவம் போல் ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொல்லி உண்மையாக்க முயற்சிக்கிறார்கள். திருக்கோயில் சொத்துக்கள் தவறான வழியில் சென்றுவிட கூடாது என்பதற்காக அறநிலையத்துறை தொடங்கப்பட்டது. பரம்பரை அறங்காவலர்களாக இருந்தவர்கள் தவறான முறையில் கோயில் சொத்துக்களை பயன்படுத்துவதை தடுக்க தொடங்கப்பட்டது.
1818-ல் தொடங்கி பல்வேறு கட்டங்களில் சீர்திருத்த நடவடிக்கைகள் மூலம் 1951-ல் இந்து சமய அறநிலையத்துறை சட்டம் இயற்றப்பட்டது. திமுக அரசு வந்தவுடன் குறைகளை பதிவிடுக என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் மூலம் தமிழ்நாடு முழுவதும் உள்ள கோயில்கள் தொடர்பான புகார்கள் பெறப்பட்டன. தமிழ்நாட்டில் 48 கோயில்கள் முதுநிலை கோயில்களாக அடையாளம் காணப்பட்டு அங்கு நடைபெறும் அனைத்தும் நேரடியாக கண்காணிக்கப்படுகிறது. இந்த 48 கோயில்களை ஒருங்கிணைத்து சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
20 மாவட்டங்களில் மழை தொடரும்.! வானிலை ஆய்வு மையம் தகவல்.!
கோயில் அறங்காவலர்கள் நியமனத்தை துரிதப்படுத்த 38 வருவாய் மாவட்டங்களுக்கு அதிகாரிகள் நியமித்து நடவடிக்கை எடுத்து திமுக ஆட்சியில் தான். கோயில்கள், பக்தர்களுக்கு தேவையான ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து திமுக அரசு செய்து வருகிறது. அதிகம் பக்தர்கள் கூடும் கோயில்களில் தேவையான பாதுகாப்பு ம்,ஆற்றும் மக்களுக்கு அனைத்து வசதிகளையும் அரசு செய்து வருகிறது.
14,000 கோயிகளில் பணியாற்றி வரும் 17,000 அர்ச்சகர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. 5,000 கோயிகளில் திருப்பணிகள் மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கோயில் நிர்வாகத்துக்கான மானியம் பலமடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதுபோன்று சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், களங்கம் கற்பிக்கும் வகையில் அவதூறு பரப்ப முயற்சிக்கின்றனர் என அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், காய்ச்ச மரம் தான் கல்லடி படுவது போல மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் விமர்சனம் உள்ளது. உயர் பதவியில் இருப்பவர்கள் ஆதாரமில்லாமல், இதுபோன்ற குற்றச்சாட்டுகளை வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று சொல்வது சரியல்ல எனவும் அமைச்சர் சேகர் பாபு குறிப்பிட்டுள்ளார்.
பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…