கல்வி நிறுவனங்கள் கல்வி கட்டணம் வசூலிப்பதில் நிர்பந்திக்க கூடாது – யுஜிசி

கல்வி நிறுவனங்கள் கல்வி கட்டணம் வசூலிப்பதில் நிர்பந்திக்க கூடாது எனயுஜிசி அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்த அனைத்து இடங்களிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இந்த கொரோனா வைரஸின் தீவிர பரவலானது கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பின் கல்வி நிறுவனங்கள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், உயர்கல்வி நிறுவனங்கள், கல்விக் கட்டணத்தை செலுத்தக்கோரி மாணவர்கள், பெற்றோர்களை வற்புறுத்துவதாக புகார் எழுந்த நிலையில், கல்வி நிறுவனங்கள், மாணவர்களிடம் கல்விக் கட்டணத்தை வசூலிப்பதில் நிர்பந்திக்காமல் செயல்பட வேண்டும் என யுஜிசி தெரிவித்துள்ளது.
மேலும், கல்விக்கட்டணம் வசூல் செய்வது தொடர்பாக நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிக்கு யூஜிசி அறிவுறுத்தியுள்ளது.