தமிழக பள்ளி மாணவர்களுக்காக, தமிழக அரசானது புதிய கல்வி தொலைக்காட்சியை தற்போது தொடங்கியுள்ளது. இந்த கல்வி தொலைக்காட்சியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அண்ணா நூற்றாண்டு விழா அரங்கத்தில் வைத்து தொடங்கி வைத்தார்.
உடன், தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், சபாநாயகர் தனபால் மற்றும் மற்ற அமைச்சர்கள் எம்.ஏக்கள் என பலர் இந்த விழாவில் கலந்துகொணடனர்.
இந்த கலவி தொலைக்காட்சியில், மாணவர்கள் நலன் சார்ந்து விளையாட்டு, அடுத்து என்ன படிக்கலாம், கற்றல் நுட்பம் என 50க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக உள்ளன. இதில், காலை 6 மணி முதல் இரவு 9 மணிவரை நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 8 வது மாடியில் சில கோடிகள் செலவிட்டு இந்த புதிய தொலைக்காட்சி அலுவலகம் பல உபகாரணங்களோடு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த தொலைக்காட்சி தொடங்கிய நிகழ்ச்சி நிரலை தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு நேரலையாக காண்பிக்க உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது. மாணவர்கள் நிகழ்ச்சியை பார்ப்பதை போட்டோ எடுத்து அரசுக்கு சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…
திருவண்ணாமலை -தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமாக வரக்கூடியது தான் கார்த்திகை மாதம் .இந்த கார்த்திகை மாதத்தில் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி…