பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருகையில் மத்தியில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பாஜகவும் , காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகின்றது.மாநிலத்துக்கு மாநிலம் மாநில கட்சிகளுடன் கூட்டணி குறித்த வியூகங்களை வகுத்து வருகின்றனர்.
தமிழகத்தில் திமுக + காங்கிரஸ் கூட்டணிக்கு முடிவாகி தொகுதி பங்கீடு நடைபெற்றுள்ளது.இதில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.மேலும் திமுக கட்சியின் தோழமை கட்சிகளாக இருக்கும் சிபிஎம் , சிபிஐ , விசிக,மனிதநேய மக்கள் கட்சி மற்றும் மதிமுக கட்சிகள் சார்பில் விரைவில் தொகுதி பங்கீடு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.
அதில் திமுக கூட்டணியில் காங்கிரஸ்க்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.அதேபோல் திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள தொரப்பள்ளி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.அதில் பேசிய அவர்,உலகத்திலேயே கிராமசபை கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடிக்க போவது திமுக தான், உள்ளாட்சி தேர்தலை நடத்தினால் திமுக வென்றுவிடும் என்பதால் தேர்தலை நடத்தாமல் உள்ளனர் அதிமுகவினர்.அதேபோல் திமுக கூட்டணி ஆட்சி மத்தியில் அமைந்த உடன் கல்வி கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.