கொரோனா ஊரடங்கு இருக்கும் சூழ்நிலையை கருத்தில்கொண்டு, 2019-20-ம் கல்வியாண்டின் இறுதியாண்டு மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு நடத்துவது , கல்லூரிகள் திறப்பு எப்போது? என்பது குறித்தும் ஏற்கனவே ஆலோசித்து அட்டவணைகளை வெளியிடப்பட்டது.
அதன்பின்னரும் தொடர்ந்து கொரோனா நோய்த்தொற்று தொடர்ந்து நீடிப்பதால், இதுகுறித்து மேலும் ஆலோசித்து முடிவு எடுக்க பரிந்துரை அளிக்க பல்கலைக்கழக மானியக்குழு சார்பில் அரியானா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் குகாத் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது.
இக்குழு அளித்துள்ள பரிந்துரை படி, ‘இறுதியாண்டு மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வை ரத்து’ செய்ய வேண்டும் என்றும், அதில் ஈடுபாடு காட்டாத மாணவர்களுக்கு கொரோனா பரவல் முடிந்ததும் தேர்வினை நடத்தலாம் என்றும் கூறியுள்ளது. அதேபோல், கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களை அக்டோபர் மாதத்தில் தான் திறக்க வேண்டும் என்று அந்தக்குழு பரிந்துரைத்துள்ளது.இந்த பரிந்துரைகளை எல்லாம் கவனம் கொண்டு ஆலோசித்த மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இது குறித்து விரைவில் அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் பல்கலைக்கழக இறுதியாண்டு செமஸ்டர்தேர்வு ரத்து செய்யப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதா? இதில் அரசின் முடிவு என்ன? என்பது குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவிக்கையில் ‘பல்கலைக்கழக இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் குறித்து ஆலோசித்து வருகிறோம்.ஆனால் அது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை.’என்று தெரிவித்தார்.
இவ்வாறு இருக்க மேலும் இதுதொடர்பாக மேலும் உயர்கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-பல்கலைக்கழக இறுதியாண்டு இறுதி செமஸ்டர் தேர்வை ரத்து செய்வது குறித்த எந்தமுடிவும் எடுக்கப்படவில்லை. ஆனால் ஆரம்பக்கட்ட ஆலோசனையினைத் தொடங்கிவிட்டோம். இது குறித்து முடிவு எடுக்க கவர்னர், முதலமைச்சரிடம் அனுமதி வாங்கவேண்டும். அவர்கள் என்ன சொல்கிறார்களோ? அதன்அடிப்படையில் தான் முடிவானது எடுக்கப்படும்.
இந்நிலையில் பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரைக்கும் முடிவுகளை அப்படியே நாம் கையாளுவதும் இல்லை. சிலநேரங்களில் தளர்வும், சிலநேரங்களில் அதனை ஏற்றுக் கொள்ளவும் முடிவுசெய்கிறோம். எனவே தேர்வு ரத்துசெய்யப்படுவது குறித்து முடிவுகளை எடுத்து அறிவிப்பதற்கு காலதாமதமாகும் என்று தெரிவித்தனர்.இதனால் தமிழகத்தில் பள்ளித்தேர்வுகள் எல்லாம் ஒரு முடிவுக்கு வந்த நிலைகள் பல்கலைகழகத்தேர்வுகள் குறித்து இன்னும் முடிவே எடுக்க வில்லை என்று வெளியாகி தகவல் கல்லூரி மாணவர்களிடையே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்று வரும் பன்னாட்டு புத்தகத் திருவிழாவில் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்ட 30 நூல்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
சென்னை: த.வெ.க தலைவர் விஜய் பரந்தூர் செல்வதற்கு காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பில், வரும் 20-ம்தேதி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம்…
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகின்ற பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 10ஆம் தேதி…
இஸ்ரேல்: ஹமாஸ் உடன் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது.…
சென்னை: 3-வது பன்னாட்டு புத்தக திருவிழாவை சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும்…
சென்னை: பொங்கல் விடுமுறைக்கு சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள், முன்கூட்டியே சென்னை திரும்புகின்றனர். பொங்கல் பண்டிகை முடிந்து, பல்வேறு மாவட்டங்களில்…