“கல்வி வணிகமாக மாறியதை உடைக்கவே கல்விக்கொள்கை கொண்டுவரப்பட்டது!”- ஸ்டாலின் கருத்துக்கு அண்ணாமலை பதில்
நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என ஸ்டாலின் கூறியது சட்டத்திற்கு உட்பட்ட கருத்து அல்ல என பாஜக மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் எனபலரும் கோரிக்கை வைத்து வரும் நிலையிலும், திட்டமிட்டபடி இன்று நீட் தேர்வுகள் தொடங்கியது. மேலும், நீட் தேர்வு அச்சத்தால் நேற்று ஒரே நாளில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் திமுக தலைவர் ஸ்டாலின், திமுக ஆட்சியில் நீட் தேர்வுகள் ரத்து செய்யப்படும் எனவும், வாய்ப்பை இழந்தவர்களுக்கு பொதுத்தேர்வு அடிப்படையில் மருத்துவம் படிக்க வாய்ப்பு உருவாக்கப்படும் என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என ஸ்டாலின் கூறியது, சட்டத்திற்கு உட்பட்ட கருத்து அல்ல என பாஜக மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். மேலும், கல்வி வணிகமாக மாறியதை உடைக்கவே கல்விக் கொள்கை கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.