புதிய கல்விக் கொள்கை தொடர்பான கூட்டத்தை மாநில கல்வித்துறை அமைச்சருடன் நடத்துவதே ஏற்புடையது என அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழு வடிவமைத்த “கல்விக் கொள்கை-2020” -க்கு மத்திய அரசு கடந்த ஆண்டு ஒப்புதல் வழங்கியது. புதிய கல்விக் கொள்கை அனைவருக்கும் சென்று சேரும் வகையில், மத்திய அரசு அதனை பல்வேறு மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட்டு இருந்தது.
2021-ம் ஆண்டுக்குள் கல்விகொள்கையை அமல்படுத்த அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் புதிய கல்விக்கொள்கையை அமல் செய்வது குறித்து மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதைத்தொடர்ந்து, புதிய கல்வி கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக நாளை அனைத்து மாநில கல்வித்துறை செயலாளர்களுடன் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ஆலோசனை நடத்தவுள்ளார். இந்நிலையில், புதிய கல்விக் கொள்கை தொடர்பான கூட்டத்தை மாநில கல்வித்துறை அமைச்சருடன் நடத்துவதே ஏற்புடையது. மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.
அரசின் சார்பில் மிக முக்கிய கருத்துக்கள், பரிந்துரைகளை தெரிவிக்க தயார் என அன்பில் மகேஷ் தெரிவித்தார். தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கை எக்காரணத்திலும் அமல்படுத்த விடமாட்டோம் என கடந்த வாரம் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : மத்தியில் நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் பொருட்டு மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் ருதுராஜ் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையில் டெல்லி…
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் , அக்சர் படேல்…
இலங்கை : பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு சென்று இருக்கும் நிலையில், இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக முன்னிலையில்…
லக்னோ : ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக விளையாடி வரும் திக்வேஷ் ரதி தான் வாங்கும் சம்பளத்தை விட அதிகமாக…
டெல்லி : கடந்த 2019-ஆம் ஆண்டு இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஹிருத்திக் ரோஷன் மற்றும் டைகர் ஷ்ராஃப் நடிப்பில் வெளியாகி…