நல்ல படித்த இளைஞர்கள் அரசியலுக்கு வருவது வரவேற்கத்தக்கது – பொன். இராதாகிருஷ்ணன்
அண்ணாமலை போன்ற நல்ல படித்த இளைஞர்கள் அரசியலுக்கு வருவது மிகவும் வரவேற்கத்தக்கது – பொன். இராதாகிருஷ்ணன் ட்வீட்.
நேற்று டெல்லியில் பாஜக தலைவர்கள் முன்னிலையில் தமிழகத்தை சேர்ந்த முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை பாஜகவில் இணைந்தார். அப்போது, தமிழக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் மற்றும் மேலிட பொறுப்பாளர் முரளிதர ராவ் இருந்தனர். இதையடுத்து தேசிய தலைவர் ஜே.பி நட்டாவை சந்தித்து பேசினார். பாரதிய ஜனதா கட்சியை மேலும் வலுப்படுத்த என்னாலான முயற்ச்சியை செய்வேன் என அண்ணாமலை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தமிழகத்தில் மீண்டும் நேர்மையான, தூய்மையான ஆட்சி வர வேண்டும் என்று 55 ஆண்டுகளாக எதிர்பார்த்திருக்கும் மக்கள் மத்தியில் அண்ணாமலை போன்ற நல்ல படித்த இளைஞர்கள் அரசியலுக்கு வருவது மிகவும் வரவேற்கத்தக்கது என்றும் அண்ணாமலை பாஜகவில் இணைந்திருப்பத்தை மகிழ்வோடு வரவேற்கிறேன் என பொன். இராதாகிருஷ்ணன் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தில் மீண்டும் நேர்மையான, தூய்மையான ஆட்சி வர வேண்டும் என்று 55 ஆண்டுகளாக எதிர்பார்த்திருக்கும் மக்கள் மத்தியில் திரு. அண்ணாமலை போன்ற நல்ல படித்த இளைஞர்கள் அரசியலுக்கு வருவது மிகவும் வரவேற்கத்தக்கது. அவர் பாஜகவில் இணைந்திருப்பத்தை மகிழ்வோடு வரவேற்கிறேன்
-பொன். இராதாகிருஷ்ணன் pic.twitter.com/UzypYd3Cjt— Pon Radhakrishnan (@PonnaarrBJP) August 26, 2020